Home
Mobile

விலை குறைக்கலாம்.. அதுக்காக ரூ.4000-ஆ.. Amazon-ல் ஆர்டர்களை தெறிக்க விடும் OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்த வேகத்தில், அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போனை அதன் அசல் விலையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.24,999 ஆக இருந்தது. இது 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும். தற்போது அமேசான் இந்தியாவில் இது ரூ.2000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.

விலை குறைக்கலாம்.. அதுக்காக ரூ.4000-ஆ.. OnePlus போன்.. எந்த மாடல்?

இதோடு சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்றும் அமேசான் இந்தியா பட்டியலிட்டுள்ளது. இப்படியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் மீது மொத்தம் ரூ.4000 தள்ளுபடியை பெற முடிகிறது; இதன் இறுதி ஆபர் விலையை ரூ.20,999 க்கு கொண்டுவர முடிகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS ஆதரவு உடன் 50MP ப்ரைமரி கேமரா + 8MP இரண்டாம் நிலை கேமரா
- 16MP செல்பீ கேமரா
- 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,500mAh பேட்டரி

விலை குறைக்கலாம்.. அதுக்காக ரூ.4000-ஆ.. OnePlus போன்.. எந்த மாடல்?

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.26,999 மற்றும் ரூ.28,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது பிளாக் இன்பினிட்டி (Black Infinity), மார்பில் மிஸ்ட் (Marble Mist) மற்றும் நெக்சஸ் ப்ளூ (Nexus Blue) ஆகிய 3 கலர்களில் வருகிற ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கும்.

புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான சற்றே சிறிய 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 12ஜிபி வரை LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ் (MediaTek Dimensity 8350 Apex) சிப்செட் கொண்டு இயங்குகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது சோனி LYT-600 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர் உடன் வருகிறது. ப்ரைமரி கேமராவுடன் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது.

முன்பக்கத்தில், இது OV08D10 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 7,100mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது சேர்க்கப்பட்ட அடாப்டருடன் 80W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP65 ரேடிங்கையும் கொண்டுள்ளது

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 4 Gets Rs 2000 Price Cut Rs 2000 Bank Discount Ahead Nord CE 5 Sale on July 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X