வந்து 5 மாசம் ஆச்சு.. அதனால ரூ.3000 டிஸ்கவுண்ட்.. லேட்டஸ்ட் OnePlus போன் மீது அசால்ட் ஆக ஆபரை அறிவித்த Amazon!
OnePlus Nord CE 4 Amazon Offer: சரியாக கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட.. அதாவது இந்திய சந்தைக்கு வந்து முழுதாக 5 மாதங்கள் கூட ஆகாத.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் மீது முழுதாக ரூ.3000 டிஸ்கவுண்ட் கொடுப்பதாக அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரலில் இது என்ன விலைக்கு அறிமுகமானது? இப்போது என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? திடீர் டிஸ்கவுன்ட்டை பெற்றுள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடலை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அறிமுக விலையும், டிஸ்கவுண்ட் விலையும்: நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் இந்தியாவில் அறிமுகமானது.

இந்த விலைகளில் நேரடி தள்ளுபடி எதுவும் இல்லை என்றாலும் கூட, அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளம் வழியாக ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி, ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் ஒன்கார்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.3,000 உடனடி தள்ளுபடி பெறுவார்கள்.
இதன் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.24,999 இல் இருந்து ரூ.21,999 ஆகவும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.26,999 இலிருந்து ரூ.23,999 ஆகவும் குறைக்க முடியும். இந்த சலுகை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 ஸ்மார்ட்போனின் இரண்டு கலர் ஆப்ஷன்களிலும் (Dark Chrome மற்றும் Celadon Marble) அணுக கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்த் சிஇ 4 மாடலை நம்பி வாங்க 4 காரணங்கள்:
1. இது தெளிவான விஷூவல்களை வழங்கும் விவிட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது
2. இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த கேமரா செட்டப்புமே (ரியர் மற்றும் செல்பீ) நல்ல அவுட்புட்டை வழங்குகின்றன
3. இது க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு 14 எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது
4. கடைசியாக இது திடமான பேட்டரி லைஃப்பை உறுதிசெய்கிறது
ஒன்பிளஸ் நோர்த் சிஇ 4 மாடலை வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்:
1. இந்த ஸ்மார்ட்போனிற்கு வரையறுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களே கிடைக்கும்.
2. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் நல்ல புகைப்படங்களை வழங்கினாலும் கூட, வீடியோ குவாலிட்டி சராசரியாகேவ உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 14 உடன் இயங்குகிறது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 Chipset) மற்றும் 8ஜிபி LPDDR4x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கேமிங்கிற்கான எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் சோனி LYT600 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சோனி IMX355 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது.
ஐபி54 ரேட்டிங், ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உடன் வரும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது. 15 நிமிட சார்ஜிங்கில் இது ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது, அதேசமயம் வெறும் 29 நிமிடங்களில் 1 முதல் 100% சார்ஜ் ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications








