Home
Mobile

புது OnePlus போன் வருதுனு பழைய மாடல் மீது ரூ.3000 டிஸ்கவுண்ட்.. என்ன மாடல்?

எல்லோருடைய கண்களும், கவனமும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மினி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடலின் மீது இருக்கும் வேளையில், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இது வருகிற 2025 மே மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் ஆனது திடீர் தள்ளுபடியை பெற்று அட்டகாசமான ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அது குறித்த விவரங்கள் இதோ:

புது OnePlus போன் வருதுனு பழைய மாடல் மீது ரூ.3000 டிஸ்கவுண்ட்!

தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 12% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,998 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 14 உடன் இயங்குகிறது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 Chipset) மற்றும் 8ஜிபி LPDDR4x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கேமிங்கிற்கான எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் சோனி LYT600 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சோனி IMX355 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது.

ஐபி54 ரேட்டிங், ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உடன் வரும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது. 15 நிமிட சார்ஜிங்கில் இது ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது, அதேசமயம் வெறும் 29 நிமிடங்களில் 1 முதல் 100% சார்ஜ் ஆகிவிடும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடலை இப்போது நம்பி வாங்கலாமா? இது தெளிவான விஷூவல்களை வழங்கும் விவிட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த கேமரா செட்டப்புமே (ரியர் மற்றும் செல்பீ) நல்ல அவுட்புட்டை வழங்குகின்றன. இது க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு 14 எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது மற்றும் இது திடமான பேட்டரி லைஃப்பை உறுதிசெய்கிறது. ஆக இப்போதும் கூட இதை நம்பி வாங்கலாம்.

ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? என்ன்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் பிளாட் டிஸ்ப்ளே உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடவே ன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பேனாவின் மீது நிலைநிறுத்தப்பட்டு, அது எப்படி 50:50 எடை விநியோகத்தை கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

எல்லாவற்றை விட முக்கியமான ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது வெறும் 185 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது 210 கிராம் எடை கொண்ட ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை விட இது இலகுவானதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது - சரியான எடை விநியோகத்துடன் இணைக்கப்பட்ட லைட் வெயிட் சேசிஸ் உடன் சேர்ந்து ஒரு வசதியான இன்-ஹேண்ட் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் என்பது போல் தெரிகிறது.

ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை இது சீனாவில், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.54,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். சீன அறிமுகத்தை தொடர்ந்து ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது இதே மாடல் பெயரின் கீழ் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் முன்னதாக வெளியான எல்லா ஒன்பிளஸ் டி சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 4 Get Discount in Amazon Ahead OnePlus Nord CE 5 India launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X