1 மாசத்துல OnePlus 13 Mini அறிமுகத்தை வச்சிக்கிட்டு ரூ.3000 விலை குறைக்கப்பட்ட பழைய OnePlus Nord மாடல்!
ஒன்பிளஸ் 13 மாடலுக்கு இருந்த எதிர்பார்ப்பை விட ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு "மினி" பெயரும் கூட ஒரு முக்கிய காரணமாகும். இது சற்றே சிறிய ஸ்மார்ட்போனாக, 6.3-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் "டி" சீரீஸ் மாடலாக இருக்கும் என்றும், 2022 ஆம் ஆண்டில் அறிமுகமான ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T) மாடலுக்கு பின்னர் எந்த டி சீரீஸ் மாடலும் வரவில்லை என்பதை, அதை அப்படியே மினி சீரீஸ் ஆக அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடல் தான் ஒன்பிளஸ் 13 மினி ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில டிப்ஸ்டர்கள் ஒன்பிளஸ் 13 மினி ஆனது மார்ச் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்கின்றனர்; அதாவது அடுத்த மாதமே அறிமுகமாகும் என்கின்றனர். சிலர் இது 2025 ஏப்ரல் மாதத்தில் தான் அறிமுகமாகும் என்கின்றனர்.
எப்படி பார்த்தாலும் இது இன்னும் அடுத்த 1 - 2 மாதங்களுக்குள் அறிமுகமாகி விடும். இதற்கிடையில் ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸின் கீழ் அறிமுகமான ஒரு பிரபலமான மாடல் ரூ.3000 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆபர் ஒன்பிளஸ் 13 மினியை வாங்கலாம் என்று எண்ணமிடும் கஸ்டமர்களை ஈர்க்கும்படி உள்ளது.
அது என்ன மாடல்? அது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி (OnePlus Nord CE 4 5G) ஸ்மார்ட்போனாகும். தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ரூ.24,999 க்கு பதிலாக ரூ,21,990 க்கு வாங்ககிடைக்கிறது. இது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனாகும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) உடன் இயங்குகிறது. 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது.
இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 Chipset) மற்றும் 8ஜிபி LPDDR4x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கேமிங்கிற்கான எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் சோனி LYT600 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சோனி IMX355 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது.
ஐபி54 ரேட்டிங், ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உடன் வரும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது. 15 நிமிட சார்ஜிங்கில் இது ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது, அதேசமயம் வெறும் 29 நிமிடங்களில் 1 முதல் 100% சார்ஜ் ஆகிவிடும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? இது தெளிவான காட்சகளை வழங்கும் அட்டகாசமான டிஸ்பிளேவை (Vivid Display) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த கேமரா செட்டப்புமே (ரியர் மற்றும் செல்பீ) நல்ல அவுட்புட்டை (Good Camera Output) வழங்குகின்றன. இது க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு 14 எக்ஸ்பீரியன்ஸை (Clean Android 14 Experience) வழங்குகிறது. கடைசியாக இது திடமான பேட்டரி லைஃப்பை (Solid Battery Life) உறுதிசெய்கிறது.


Click it and Unblock the Notifications








