அதிருது சேல்.. ரூ.20000 பட்ஜெட்ல Nord போன்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) இதுவரையில் கிடைக்காத தள்ளுபடியில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) போன் விற்பனை செய்யப்படுகிறது. அமோலெட் டிஸ்பிளே, சோனி கேமரா, 80W சார்ஜிங் போன்ற அம்சங்களில் பின்னிப்பெடல் எடுக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE 3 5G Specification): இந்த ஒன்பிளஸ் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 782ஜி 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 782G 6nm Mobile) சிப்செட் வருகிறது.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) மற்றும் அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கொண்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போனில் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
அதோடு மைக்ரோஎஸ்டி சப்போர்ட் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1080 x 2400 பிச்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
அதோடு எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார் கொண்ட (Sony IMX355) 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

அதோடு 2 எம்பி மேக்ரோ வருகிறது. இந்த டிரிபிள் ரியர் சிஸ்டமானது, (Triple Rear System) ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங், அல்ட்ரா ஸ்டெடி மோட் (Ultra Steady Mode), டூயல் வியூ வீடியோ (Dual-view Video), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
அதேபோல ஸ்டெடி மோட் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி போனில் 5000mAh பேட்டரி வருகிறது. அதோடு 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. 15 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. இன் - டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ சப்போர்ட் உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 6 (Wi-Fi 6), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எஃப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. அக்வா சர்ஜ் (Aqua Surge) மற்றும் கிரே சிம்மெர் (Grey Shimmer) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ 24,999ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசான் தளத்தில் ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications