Home
Mobile

அடுத்த ஆப்பிள் நீதான்! கேமராவில் மிரட்டி எடுக்கும் OnePlus! அதுவும் பட்ஜெட் விலை! எந்த மாடல்?

மிட்-ரேன்ஞ் விலையில் ஆப்பிள் போன்களுக்கு நிகரான கேமரா அம்சங்களை கொண்டிருக்கும் வகையில், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) போனின் கேமரா சென்சார் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விலையில், இப்படிவொரு போன் கிடைக்காது என்பதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3), ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 ஆர் (OnePlus Nord Buds 2R) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஆகிய மூன்று ப்ராடெக்ட்களும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகிறது. இதில், அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கும் மாடல் என்றால், அது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி மட்டுமே.

கேமராவில் மிரட்டி எடுக்கும் OnePlus! அதுவும் பட்ஜெட் விலை! எந்த மாடல்?

ஏனென்றால், இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன் மிட்-ரேன்ஞ் அல்லது அதற்கும் குறைவான விலையில் வெளியாக வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கேமரா செட்டப் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு 80W சூப்பர்வூக் சார்ஜ், 12 ஜிபி ரேம் உள்ளிட்ட மற்ற அம்சங்களும் வியக்கும்படி இருக்கிறது. இந்த போனின் முழு அம்சங்கள் பின்வருமாறு.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 அம்சங்கள் (OnePlus Nord CE 3 Specifications): இந்த ஒன்பிளஸ் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த போனின் மெயின் கேமரா டிரிபிள் ரியர் செட்டப் கொண்டுள்ளது.

அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ சென்சார் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக வெளியாக வாய்ப்புள்ளது. 80W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் டெக்னாலஜி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon 782G) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) வருகிறது. அட்ரினோ கிராபிக்ஸ் கார்ட் கொடுக்கப்படலாம். அக்வா சர்ஜ் ( Aqua Surge) மற்றும் கிரே ஷிம்மர் (Grey Shimmer) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது.

இந்த போன் வரும் ஜூலை 5ஆம் தேதி நோர்ட் சம்மர் லான்ஞ் ஈவெண்ட் (Nord Summer Launch Event) நிகழ்வின்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போனுடன் ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3), ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 ஆர் (OnePlus Nord Buds 2R) ஆகியவையும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,000 முதல் ரூ.28,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 Specifications Price Details With Camera Feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X