Home
Mobile

தூக்கி பாக்கெட்டில் போடும் விலை! மிரட்டலாக அறிமுகமான OnePlus மாடல்! கெத்துகாட்டும் கேமரா! நின்னுபேசும் பேட்டரி

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் மிட்-ரேன்ஞ் விலை போன்களில், மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த போனின் விலை, அம்சங்கள், விற்பனை தேதி உள்ளிட்ட விவரங்கள் இதோ.

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவத்தின் நோர்ட் சம்மர் லான்ஞ் ஈவெண்ட் (Nord Summer Launch Event) நிகழ்வு இன்று (ஜூலை 5) கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்வில், ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3), ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 ஆர் (OnePlus Nord Buds 2R), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஆகிய மூன்று ப்ராடெக்ட்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

தூக்கி பாக்கெட்டில் போடும் விலை! மிரட்டலாக அறிமுகமான OnePlus மாடல்!

இதில் மிட்-ரேன்ஞ் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன் ஈர்த்து விட்டது. ஏனென்றால், நோர்ட் சீரிஸ் போன்களின் கேமராக்கள் ஆப்பிள் போன்களுக்கு நிகராக இருக்கும். ஆனால், சற்று விலை கூடுதலாக இருப்பதால், காத்திருந்து வாங்க வேண்டியிருந்தது. ஆனால், இந்த போன் கம்மியான விலையில் வந்து ஒன்பிளஸ் பிரியர்களை குஷிப்படுத்திவிட்டது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 அம்சங்கள் (OnePlus Nord CE 3 Specifications): இந்த ஒன்பிளஸ் போன் 6.74 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon 782G) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன், 8 ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என்று 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனின் கேமராவை பொறுத்தவரையில் டிரிபிள் ரியர் செட்டப் வருகிறது. அந்த வகையில், சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வருகிறது. செல்பீ கேமரா 16 எம்பியாக இருக்கிறது. இந்த போனில் 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

வெறும் 15 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.26,999க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.28,999க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால், வரும் ஆகஸ்ட் மாதத்திலேயே வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 Price Specifications Sales Timeline After Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X