கும்பிடு போட்டு வாங்கலாம்.. அவ்ளோ கம்மி.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. ஒன்பிளஸ் போனாச்சே யாரு விடுவா?
இந்தியாவில் முதல்முறையாக ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் (OnePlus Nord Series) மாடல்களிலேயே ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) போன் ஆஃபர் விலையில் ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைக்கப்போகிறது. இதன் அம்சங்கள், விற்பனை தேதி, ஆஃபர் விவரங்கள் இதோ.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன் ஜூலை 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்த மாடல் நோர்ட் சீரிஸ் போன்களிலேயே கம்மியான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பில், ஒன்பிளஸ் பிரியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்போது, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 அம்சங்கள் (OnePlus Nord CE 3 Specifications): இந்த ஒன்பிளஸ் போன் 6.74 இன்ச் (1080 x 2400 பிச்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon 782G) சிப்செட் வருகிறது. அதோடு அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த ஒன்பிளஸ் போன், 8 ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என்று 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போனின் கேமராவை பொறுத்தவரையில், டிரிபிள் ரியர் செட்டப் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரியை வெறும் 15 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், டூயல் நானோ மற்றும் எஸ்டி கார்ட் போர்ட், இன் - டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், டைப் - சி சார்ஜிங் போர்ட், ப்ளூடூத் 5.3 உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.26,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.28,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அறிமுக சலுகையாக ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.26,999 மதிப்புள்ள மாடல் ரூ.24,999க்கும், ரூ.28,999 மதிப்புள்ள மாடல் ரூ.26,999க்கும் விற்பனைக்கு கிடைக்கப்போகிறது. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் வாங்கிக்கொள்ள முடியும். அதற்கு முன்னதாகவே ப்ரீ-புக்கிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் போன்களிலேயே முதல்முறையாக ரூ.25,000 பட்ஜெட்டில் பட்டாசான அம்சங்களுடன் இந்த மாடல் கிடைப்பதால் விற்பனையில் சக்கைபோடு போடும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








