Home
Mobile

யோசிக்காம வாங்குவீங்க.. ரூ.24,999 போதும்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. ஒன்பிளஸ் போனாச்சே.. யாரு விடுவா?

இந்தியாவின் ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களையும் கொக்குபோல காத்திருக்கும்படி முதல் முறையாக நோர்ட் சீரிஸ் மாடலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதன் விற்பனை தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்தப்பட்டியான ஒன்பிளஸ் பிராண்ட்டுக்கு மிகப்பெரும் வரவேற்பு உருவாகிவிட்டது. அதிலும், ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் மாடல்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. ஏனென்றால், அந்த மாடல்களில் கேமரா மற்றும் பர்பாமென்ஸ் வேற லெவலில் இருக்கும். இந்த மாடல் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையாவதால், காத்திருந்து வாங்க வேண்டியிருந்தது.

ரூ.24,999 போதும்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆனால், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன் வெறும் ரூ.26,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, இந்த விலையிலும், இப்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரூ.25,000 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போனை வாங்க முடியும். இந்த போனின் முழு அம்சங்கள் பின்வருமாறு.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 அம்சங்கள் (OnePlus Nord CE 3 Specifications): இந்த ஒன்பிளஸ் நோர்ட் போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1080 x 2400 பிச்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+), 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு இருக்கிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon 782G) சிப்செட் வருகிறது. அதோடு ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) வருகிறது. மேலும், அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் போன், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போனின் கேமராவை பொறுத்தவரையில், டிரிபிள் ரியர் செட்டப் வருகிறது.

அந்த வகையில், சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் மற்றும் ஓஐஎஸ் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு (Ultra-Wide) லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ (Macro) லென்ஸ் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி இருக்கிறது.

இந்த பேட்டரியை வெறும் 15 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும், வழக்கமான டூயல் நானோ சிம் போர்ட், எஸ்டி கார்ட் போர்ட், டைப் - சி சார்ஜிங் போர்ட், இன் - டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ளூடூத் 5.3 உள்ளிட்ட அம்சங்களும் வருகின்றன.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.26,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.26,999 மதிப்புள்ள வேரியண்ட்டை ரூ.24,999 க்கும், ரூ.28,999 மதிப்புள்ள வேரியண்ட்டை ரூ.26,999 க்கும் வாங்கிக் கொள்ள முடியும். இந்த போன் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் போன்களிலேயே ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த மாடல் வெளியாக இருப்பதால் விற்பனையில் சக்கைபோடு போடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 Phone Under Rs 25000 Sales in India August 4 Check Specifications Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X