அசூர விற்பனை.. வெறும் ரூ.17,680 பட்ஜெட்ல 108MP கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 மற்றும் ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஆகிய 3 போன்களுக்கும் மிரள வைக்கும் படியான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள், விலை (OnePlus Nord CE 3 Lite Specification, Price): இந்த போனில் 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி சிப்செட் வருகிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. அதோடு 8 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோர்ட் போனில் 67W சூப்பர்வூக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,500 தள்ளுபடியில் வெறும் ரூ.17,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 அம்சங்கள், விலை (OnePlus Nord CE 3 Specification, Price): இந்த போனில் 6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 782G 6என்எம் மொபைல் சிப்செட் வருகிறது.

இந்த வேரியண்ட்டில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.
இந்த போனில் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,995ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட்டில் ரூ.1,500 தள்ளுபடியில் வெறும் ரூ.23,455க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 11ஆர் அம்சங்கள், விலை (OnePlus 11R Specification, Price): இந்த ஒன்பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 4என்எம் மொபைல் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 6.74 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த போனிலும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த போனில் 100W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பிளஸ் 11ஆர் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,948ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,998 தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.37,950க்கு வாங்கி கொள்ள முடியும்.
இந்த தள்ளுபடியை பெற ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். அதேபோல முந்தைய 2 நோர்ட் சீரிஸ் போன்களையும் வாங்க பெடரல் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். ஒன்பிளஸ் போன்களுக்கு நல்ல ஆஃபர் வரும்போது, வாங்க வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு இந்த தள்ளுபடி நல்ல நேரமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








