Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.16000 போதும்.. 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் பிரைம் டே விற்பனை (Amazon Prime Day Sale) சூடு பிடித்துள்ள நேரத்தில் ஒன்பிளஸ் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிரீமியம் லுக்கில் 108 எம்பி கேமரா, 64W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிட்செட் போன்ற பீச்சர்களில் வாங்க தூண்டுகிறது. இந்த மாடலுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் முழு பீச்சர்கள் இதோ.

ஜூலை 20ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் அமேசான் பிரைம் டோ விற்பனை நடக்கிறது. இந்த விற்பனையில் ஒன்பிளஸ் மாடல்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. லேட்டஸ்ட் மாடல்களான ஒன்பிளஸ் நோர்ட் 4, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் ஆகியவை கிடைக்காத தள்ளுபடியில் விற்பனையாகின்றன.

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.16000 போதும்.. 108MP கேமரா.. எந்த மாடல்?

ஆனால், அமேசான் பிரைம் டே விற்பனை இல்லாமலேயே இன்றளவும் விற்பனையில் சக்கைப்போடு போட்டுவரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி மாடலானது, சத்தமே இல்லாமல் இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் விலையில் விற்பனையாகி வருகிறது. ரூ.19,999 பட்ஜெட்டில் கிடைத்த இந்த போன் ரூ.16,000 பட்ஜெட்டுக்கு வந்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specifications): இந்த நோர்ட் மாடலில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் மற்றும் ஆக்சிஜன்ஓஸ் 13.1 (OxygenOS 13.1) வருகிறது. அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா (சாம்சங் சென்சார்) + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் ஈஐஎஸ் (EIS), ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.

16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் 1080p வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. இந்த நோர்ட் மாடலில் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. மேலும், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனில் 67W சூப்பர்வூக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி உள்ளது. டைப்-சி சார்ஜிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் வருகிறது.

இந்த போன் அறிமுகமான போது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 19,999ஆக இருந்தது. ஆனால், இப்போது அமேசானில் வெறும் ரூ.16,851 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதிலும் ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,101 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 Lite With 108 Camera Sale Under Rs 17000 in Amazon Discount Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X