Home
Mobile

மிரளுது ஆர்டர்.. வெறும் ரூ.18999 போதும்.. 108MP கேமரா.. 1TB மெமரி.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமாக 108எம்பி கேமரா, 8ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட் போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) போனுக்கு பிச்சியெடுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specifications): இந்த ஒன்பிளஸ் நோர்ட் லைட் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) வருகிறது. அதோடு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 619எல் ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.18,999க்கு 108MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த ஒன்பிளஸ் போனில் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்டிசி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதோடு 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. மொத்தமாக அசாகி டிராகன்டெயில் ஸ்டார் கிளாஸ் (Asahi Dragontail Star Glass) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM ) மற்றும் மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் பிரம்மாண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் கூடிய 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி பிளாஷ் லைட் சப்போர்ட் உள்ளது.

அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சாருடன் கூடிய 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ஒன்பிளஸ் மாடலில் மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக 67W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு சைடு பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint Scanner), 3.5மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

மேலும், ப்ளூடூத் 5.1, வை-பை 6, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நோர்ட் லைட் மாடலில் பாஸ்டல் லைம் (Pastel Lime) மற்றும் குரோமேடிக் கிரே (Chromatic Gray) ஆகிய 2 கலர்கள் உள்ளது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் நிர்யணம் செய்யப்பட்டது.

இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் நோர்ட் சீரிஸ் மாடல் கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த விற்பனையை பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலுக்கு முன்பு மேலும் சூடுபிடிக்க வைக்கும் விதமாக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அதிரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 256 ஜிபி மாடலுக்கு ரூ.1,100 கேஷ் பேக்கும், 128 ஜிபி மாடலுக்கு ரூ.1,000 கேஷ் பேக்கும் வழங்கப்படுகிறது.

இந்த கேஷ் பேக்கை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே, 128 ஜிபி மாடலை வெறும் ரூ.18,999க்கு வாங்கிக் கொள்ள முடியும். இவ்வளவு கம்மியான விலையில் நோர்ட் போன் கிடைப்பதால், ஒன்பிளஸ் பிரியர்க் ஆர்டருக்கு மேல் ஆர்டர் செய்து வருகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 Lite Under Rs 20000 in Flipkart Ahead Big Billion Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X