தெறி ஆர்டருக்கு ரெடி.. ரூ.2500 கட்.. வெறும் ரூ.17499 போதும்.. 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் பிரியர்களை கொக்குப்போல காத்திருக்க வைக்கும்படியான தள்ளுபடி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) போனுக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை வரும் அக்டோபர் 8ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த விற்பனையில் ஒன்பிளஸ் பிரியர்களை அறக்கப் பறக்க செய்யும் விதமாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனுக்கு ரூ.2,500 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி பெறுவது? அந்த போனின் முழு அம்சங்கள் என்ன? உள்ளிட்ட விவரம் இதோ.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specifications): இந்த நோர்ட் மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அசாகி டிராகன்டெயில் ஸ்டார் கிளாஸ் டிஸ்பிளே பாதுகாப்பு கொண்டிருக்கிறது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் லைட் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) மற்றும் அட்ரினோ 619எல் ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் வருகிறது.
இந்த ஒன்பிளஸ் போனில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்னும் டிரிபிள் ரியர் செட்டப் வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம்பெற்றுள்ளது. .
சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த நோர்ட் லைட் போனானது, பாஸ்டல் லைம் (Pastel Lime) மற்றும் குரோமேடிக் கிரே (Chromatic Gray) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனில் 67W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வந்து, சக்கைப்போடு போட்டது. நோர்ட் சீரிஸ் மாடல்களிலேயே ரூ.20,000 பட்ஜெட்டை விட கம்மியான விலைக்கு, இந்த போன் கிடைத்ததால் இன்றளவும் விற்பனை நன்றாகவே இருக்கிறது.
இந்த விற்பனையை மீண்டும் சூடு பிடிக்க வைக்கும் விதமாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் பிரம்மாண்ட டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட்டும், ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட்டும் என மொத்தமாக ரூ.2,500 விலைக்குறைப்பில் இந்த போன் கிடைக்க இருக்கிறது.
வரும் அக்டோபர் 8ஆம் தேதியில் இருந்து மட்டுமே இந்த டிஸ்கவுண்ட்டை அமேசானில் பெற முடியும். இதில் பேங்க் டிஸ்கவுண்ட் எஸ்பிஐ பேங்க் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.17,499க்கு வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








