நம்பி வாங்க 5 காரணம்.. வாங்காமல் இருக்க 8 காரணம்.. OnePlus Nord CE 3 Lite க்கு பதிலா வேற எந்த போனை வாங்கலாம்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை 5ஜி போனாக அறிமுகமாகியுள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ( OnePlus Nord CE 3 Lite 5G) ஏப்ரல் 10 ஆம் தேதி மத்தியம் 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
ரூ.19,999 க்கும் (8ஜிபி + 128ஜிபி), ரூ.21,999 க்கும் (8ஜிபி + 256ஜிபி) வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-ஐ ஏன் நம்பி வாங்கலாம்? ஏன் வாங்காமல் தவிர்க்கலாம்? இதற்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை வாங்கலாம்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஏன் வாங்கலாம்? இது 9 5ஜி பேண்ட்களுடன் வருகிறது; நிலையான பேட்டரி லைஃப்பை வழங்குகிறது; வயர்டு 67W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது; சுவாரசியமாக 3.5மிமீ ஆடியோ ஜாக்கை கொண்டுள்ளது; இதன் கேமரா செட்டப் "கண்ணியமான" பகல் நேர புகைப்படங்களை உறுதி செய்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-ஐ ஏன் வாங்காமல் தவிர்க்கலாம்? எவ்வளவு நல்ல போனாக இருந்தாலும் கூட அதில் சிறிய குறைகள் இருக்கத்தான் செய்யும். அப்படியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட்டிலும் கூட சில சிறிய குறைகள் உள்ளன.
இது பிளாஸ்டிக் யூனிபாடியுடன் வருகிறது; இதில் எல்சிடி டிஸ்ப்ளேவே உள்ளது; டிஸ்பிளேவின் ப்ரைட்னஸ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்; யுஐ-இல் ஆட்ஸ் உள்ளன; இது கேமிங்கிற்கான ஒரு ஸ்மார்ட்போன் அல்ல; நைட் போட்டோகிராஃபி சுமார் தான்; ப்ளோட்வேர் உள்ளது; ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் இல்லை.
ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்கள்: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-க்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை வாங்கலாம் என்கிற கேள்விக்கி ஒன்றல்ல, ஐந்து பதில்களை கூறலாம்: மோட்டோ ஜி82, சாம்சங் கேலக்ஸி எம் 53, போக்கோ எக்ஸ்5 ப்ரோ, ரியல்மி 10 ப்ரோ மற்றும் இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி.
நினைவூட்டும் வண்ணம் மோட்டோ ஜி82 5ஜி (Moto G82 5G) ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி, 120Hz 6.6 இன்ச் பிஓஎல்இடி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், ஓஐஎஸ் உடனான 50MP ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கிறது.
அடுத்ததாக உள்ள சாம்சங் கேலக்ஸி எம்53 (Samsung Galaxy M53) மீடியாடெக் டைமன்சிட்டி 900 ப்ராசஸர், 5000mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, 108MP மெயின் கேமரா போன்ற அம்சங்களுடன் ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதே போல போக்கோ எக்ஸ்5 ப்ரோ (Poco X5 Pro) ரூ.22,999 க்கும், ரியல்மி 10 ப்ரோ (Realme 10 Pro) ரூ.18,999 க்கும் மற்றும் இந்த 'ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்ஸ்' பட்டியலில் கடைசியாக உள்ள இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி (Infinix Note 12 Pro 5G) ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications