பிளிப்கார்ட்டே அதிருது.. ரூ.18,999க்கு நோர்ட் போன்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 108எம்பி கேமரா, 8ஜிபி ரேம், 67W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களில் இந்த போன் பின்னியெடுக்கிறது.
இந்தியாவில் ஒன்பிளஸ் (OnePlus) நோர்ட் சீரிஸ் போன்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்துவருகிறது. அந்த வரிசையில், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) மாடல் அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி பட்ஜெட்டில் வெளியாகியது. இன்றளவும் விற்பனையில் நல்லவேற்பு பெற்றுவரும் நிலையில், அதற்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specifications): இந்த ஒன்பிளஸ் போன் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) எல்டிசி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில், 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
அதோடு அசாகி டிராகன்டெயில் ஸ்டார் கிளாஸ் (Asahi Dragontail Star Glass) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த லைட் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM ) மற்றும் மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் இடம்பெற்றுள்ளது. இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது. சாம்சங் எச்எம்6 சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா செட்டப் வருகிறது.
அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் லைட் மாடலில் 67W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 5.1, வை-பை 6, ஜிபிஎஸ் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் பாஸ்டல் லைம் (Pastel Lime) மற்றும் குரோமேடிக் கிரே (Chromatic Gray) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் ஏப்ரல் 11ஆம் தேதி விற்பனைக்கு வந்து, மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அதிரடி தள்ளுப்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பிளஸ் மாடலை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் உங்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, 108 எம்பி கேமரா, 8 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனை வெறும் ரூ.18,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








