Home
Mobile

அதிருது ஆர்டர்.. வெறும் ரூ.17,000 பட்ஜெட்ல OnePlus போன்.. 108MP கேமரா.. 67W சார்ஜிங் வேற.. எந்த மாடல்?

அமேசான் குடியரசு தின விற்பனையில் (Amazon Republic Day Sale) 108எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) போன் இதுவரை கிடைக்காத விலைக்கு வந்துள்ளது.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான் தளத்தில் பிரீமியம் முதல் மிட்-ரேஞ்ச் வரையில் விலை கொண்ட பல்வேறு போன்களுக்கு இதுவரை கொடுக்கப்படாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனத்தையும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனின் தள்ளுபடி விலை ஈர்த்துள்ளது.

ரூ.17,000 பட்ஜெட்ல OnePlus போன்.. 108MP கேமரா.. 67W சார்ஜிங் போன்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specification): இந்த ஒன்பிளஸ் நோர்ட் லைட் மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்டிசி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அசாகி டிராகன்டெயில் ஸ்டார் கிளாஸ் சப்போர்ட் உள்ளது.

இந்த ஒன்பிளஸ் போனில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

ரூ.17,000 பட்ஜெட்ல OnePlus போன்.. 108MP கேமரா.. 67W சார்ஜிங் போன்!

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகின்றன. மேலும், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது.

இந்த போனில் 67W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. அதேபோல 3.5மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த போனில் சைடு பேஸிங் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனானது, பிரீமியம் டிசைனில் பாஸ்டல் லைம் (Pastel Lime) மற்றும் குரோமேடிக் கிரே (Chromatic Gray) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் நம்ப முடியாத தள்ளுபடியை அமேசான் அறிவித்துள்ளது.

இந்த போனுக்கு ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட்டும், ரூ.1,250 பேங்க் டிஸ்கவுண்ட்டும் கொடுக்கப்படுகிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை பெற எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்த வேண்டும். அதேபோல ரூ.18,700 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனில் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.17,748 விலைக்கு வாங்கலாம்.

இந்த தள்ளுபடியானது, இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு வழங்கப்படுகிறது. அதனால், விரைவில் பழைய விலைக்கு இந்த போன் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, கம்மியான பட்ஜெட்டில் நோர்ட் சீரிஸ் போன் வாங்க நினைப்பவர்கள் இந்த ஆஃபரை பயன்படுத்தி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 Lite 5G Under Rs 18,000 With Discount in Amazon Republic Sale Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X