Home
Mobile

பட்ஜெட் விலையில் இதை விட ஒரு நல்ல போன் கிடைக்காது.! தேதி குறிச்சாச்சு- நல்ல செய்தி சொன்ன OnePlus.!

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் 4-ம் தேதி அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக தரமான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் சாம்சங், மோட்டோ நிறுவனங்கள் சமீபத்தில் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தான் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் புதிய OnePlus 5ஜி ஸ்மார்ட்போன்.!

தற்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனின் விலை மற்றும் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றிய சற்று விரிவாகப் பார்ப்போம்.8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இதில் உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,800 x 2,400 பிக்சல்ஸ்,
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் புதிய OnePlus 5ஜி ஸ்மார்ட்போன்.!

108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ்
ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். இதுதவிர எல்இடி
பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமா ஸ்மார்ட்போன். இந்த புதிய போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும், அதேசமயம் இதை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்.

5ஜி, ப்ளூடூத் 5.1, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த புதிய போன் 195 கிராம் எடையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் புதிய OnePlus 5ஜி ஸ்மார்ட்போன்.!

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.21,999-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. அதாவது தனித்துவமான இயங்குதள வசதி, அட்டகாசமான கேமரா, நீண்ட நேரம் பேக்கப் வழங்கும் பேட்டரி, 5ஜி ஆதரவு, தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குவதால் இந்த போனை நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 Lite 5G to launch in India at Rs 21,999: Key specifications officially confirmed by company : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X