வெளுக்குது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.14,485-க்கு நோர்ட்.. 108MP கேமரா.. 67W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் பிரியர்கள் கனவிலும் நினைக்காத டிஸ்கவுண்ட் விலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) கிடைக்கிறது. ரூ.19,999 பட்ஜெட்டில் வெளியான இந்த நோர்ட் போன் இப்போது, ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. 108 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம், 67W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டருக்கு கிடைக்கும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி பிளிப்கார்ட் (OnePlus Nord CE 3 Lite 5G Flipkart): இந்த நோர்ட் போனானது, இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வந்தபோது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருந்தது. ஆனால், இப்போது, எந்தவித பேங்க் கார்டுகளும் இல்லாமலேயே வெறும் ரூ.14,485 பட்ஜெட்டில் ஆர்டருக்கு வந்துள்ளது.

இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, நேரடி விலை குறைப்பில் கிடைக்கிறது. இதனால், ஒன்பிளஸ் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்? 2023ஆம் ஆண்டில் வெளியானதால், ஓஎஸ் அப்கிரேட் எப்படி இருக்கும்? உள்ளிட்ட விவரங்கள் இதோ.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite 5G Specifications): இப்போது, மார்கெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்ட மாடல்கள் வருகின்றன. ஆனால், இந்த நோர்ட் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 2 வருட சாப்ட்வேர் அப்டேட் கொடுக்கப்படுகிறது. ஆக்சிஜன்ஓஸ் 13.1 (OxygenOS 13.1) உள்ளது.
அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் பட்ஜெட்டுக்கு ஏற்ப பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் 6என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Octa Core 6nm Qualcomm Snapdragon 695 5G SoC) சிப்செட் கிடைக்கிறது. கூடவே 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்கிரேட்களையும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் போன் கொடுக்கிறது.
டிஸ்பிளேவில் அமோலெட் கிடைக்காது. இருப்பினும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் பி3 கலர் காமட் மற்றும் 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளது. ஆகவே, மீடியம் அவுட்புட் வீடியோ குவாலிட்டி எதிர்பார்க்கலாம்.
கேமராவில் பக்காவான மாடலாகவே இருக்கிறது. ஏனென்றால், மல்டி ஆட்டோபோகஸ் (Multi Autofocus) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) சப்போர்ட் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. 6X ஜூமிங் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட இந்த கேமராவில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கிடைக்கிறது.
மேலும், 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 8 ஜிபி ரேம் மட்டுமல்லாமல் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் உள்ளது. இதுபோக 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் கிடைக்கிறது. 67W சூப்பர் வூக் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. லிம் (Lime) மற்றும் கிரே (Grey) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








