Home
Mobile

OnePlus நோர்ட் சிஇ 4 கம்மிங்.. சத்தமின்றி பழைய நோர்ட் போனுக்கு விலைகுறைப்பு.. 108MP கேமரா.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், அமோலெட் டிஸ்பிளே, 50எம்பி கேமரா, 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 போன் வெளிவரும்.

இந்நிலையில் புதியஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் வெளிவர உள்ளதால் பழைய ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தான் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

சத்தமின்றி பழைய நோர்ட் போனுக்கு விலைகுறைப்பு..108MP கேமரா.. எந்த மாடல்

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.16,999 இருந்தால் போதும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி வாங்கிட முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite 5G specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போன் இயங்குகிறது. குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது ஸ்னாப்டிராகன் ப்ராசஸர். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

108 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.

சத்தமின்றி பழைய நோர்ட் போனுக்கு விலைகுறைப்பு..108MP கேமரா.. எந்த மாடல்

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 67W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது . எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 30 நிமிடங்களில் 0 - 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது. 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, 3.5மிமீ ஆடியோஜாக், ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), கேம் ஃபோகஸ் மோட், நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் ஆதரவுகளும் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 Lite 5G price cut in India: check new price: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X