அடிதூள்.. சத்தமில்லாமல் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் வழங்கிய ஒன்பிளஸ்.. எந்த மாடலுக்கு தெரியுமா?
இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஸ்டேபில் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் (Stable Android 14 Update) கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஆண்ட்ராய்டு 14 அப்டேட் ஆனது பல்வேறு புதிய அம்சங்களை இந்த ஒன்பிளஸ் போனுக்கு கொண்டுவருகிறது.
அதேபோல் குளோஸ்டு பீட்டா (Closed Beta) மற்றும் ஓப்பன் பீட்டா (Open Beta) திட்டங்களுக்குப் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான OxygenOS 14 அப்டேட் ஆனது கிராஸ்-டிவைஸ் கனெக்டிவிட்டி-ஐ மேம்படுத்துகிறது. இதுதவிர புதிய அப்டேட் மூலம் இந்த போனின் சிஸ்டம் அனிமேஷன்கள் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த போனின் பாதுகாப்பு வசதி, பேட்டரி, செயல்திறன், அக்வாமார்பிக்-தீம் ரிங்டோன் (Aquamorphic-themed ringtones) போன்ற அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்பேட் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி பயனர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இப்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் மூலம் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி இயக்கப்படுகிறது. எனவே கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது ஸ்னாப்டிராகன் ப்ராசஸர். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 உடன் இந்த போன் வெளிவந்தது. தற்போது ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைத்துள்ளது.
அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு வசதி இதில் உள்ளது. 67W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். பின்பு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 30 நிமிடங்களில் 0 - 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் மெயின் கேமரா (சாம்சங் எச்எம்6 சென்சார் எஃப் /1.75 சென்சார் இஐஎஸ்) + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றம் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கேம் ஃபோகஸ் மோட், நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போன்.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, 3.5மிமீ ஆடியோஜாக், ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது ரூ.19,999 விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








