Home
Mobile

ஜூலை 5க்கு அப்புறம்.. பலரோட கையிலும் இந்த OnePlus போன் தான் இருக்கும்.. ஏன்னா விலை அப்படி!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது, புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் ஒட்டுமொத்த இந்தியர்களையும் "வளைச்சுப்போட" முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. ஏனென்றால், வருகிற ஜூலை 5 ஆம் தேதி அன்று ஒன்றல்ல, இரண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது!

ஜூலை 5 ஆம் தேதியன்று, ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 5க்கு அப்புறம்.. பலரோட கையிலும் இந்த OnePlus போன் தான் இருக்கும்!

இதற்கிடையில், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலை வைத்து பார்க்கும் போது, அறிமுகத்திற்கு பின்னர் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனானது பட்ஜெட்-வாசிகளால் போட்டிப்போட்டு வாங்கப்படும் என்பது போல் தெரிகிறது.

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் பிராரின் (@heyitsyogesh) கூற்றுப்படி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.25,000 முதல் ரூ.28,000 க்குள் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என்கிற தகவலும் லீக் ஆகியுள்ளது.

அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.7-இன்ச் லிக்விட் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 12ஜிபி வரையிலான ரேம் உடனாக ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைப்பர் டச் அம்சம் மற்றும் ஹைப்பர்பூஸ்ட் எஞ்சின் உடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) கொண்டே இயக்கப்படும். மேலும் இது 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களுக்கான வாக்குறுதிகளையும் வழங்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும். அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் ஐஎம்எக்ஸ்890 மெயின் கேமரா + 112 டிகிரி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 8 மெகாபிக்சல் சென்சார் + ஒரு 4செமீ மேக்ரோ லென்ஸுடன் கூடிய 2-மெகாபிக்சல் சென்சார் இடம்பெறலாம்.

செல்பீ கேமராவை பொறுத்தவரை, டிஸ்பிளேவின் மேற்புற மையத்தில் ஹோல்-பஞ்ச் கட்அவுட் டிசைன் இடம்பெறும்; அதில் ஒரு செல்பீ கேமரா பேக் செய்யப்படும் என்பது மட்டும் (டீஸர் போட்டோ வழியாக) உறுதி செய்யப்பட்டுள்ளது; ஆனால் அந்த கேமராவில் என்ன சென்சார் இருக்கும் என்கிற விவரங்கள் எதுவும் இல்லை.

விலை நிர்ணயத்தை கருத்தில் கொண்டால், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பெரும்பாலும் பிளாஸ்டிக் ஃபிரேம் உடன் தான் வரும். கடைசியாக இது 80W வயர்டு சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 5G to launch in India on July 5 Price in India Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X