திடீரென விலையை குறைத்த OnePlus.. 80W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலையைக் குறைத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
அதாவது 8ஜபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) மாடல் முன்பு ரூ.26,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த மாடலுக்கு ரூ.2000 விலை குறைக்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் முன்பு ரூ.28,999-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இந்த 12ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் தற்போது ரூ.1000 விலைகுறைப்பு பெற்று ரூ.27,999-க்கு வாங்க கிடைக்கிறது. குறிப்பாக ஆஃப்லைன் தளங்களில் மட்டுமே ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஸ்மார்ட்போன் ஆனது 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2412 x 1080 பிக்சல்ஸ், 10-பிட் கலர் டெப்த், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியைக் (கார்னிங் கொரில்லா கிளாஸ் 5) கொண்டுள்ளது இந்த போன்.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 782ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. எனவே கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது ஸ்னாப்டிராகன் ப்ராசஸர். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் அட்ரினோ 642எல் ஜிபியு வசதி இதில் உள்ளது.
50 மெகாபிக்சல் மெயின் கேமரா (சோனி ஐஎம்எஸ்890) + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.
80று சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். பின்பு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது சில நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கேம் ஃபோகஸ் மோட், நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, 3.5மிமீ ஆடியோஜாக், ப்ளூடூத் 5.3, யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன்.
குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








