ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன OnePlus: குறைந்த விலையில் வருகிறது 5G போன்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அருமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சியோமி, விவோ நிறுவனங்களை விடத் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 5ஜி

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் குறைந்த விலையில் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

குறுக்கே வந்து நிற்கும் புதிய அம்சம்! இனிமேல் ஒரு போட்டோவை அவ்ளோ ஈஸியா Forward பண்ண முடியாது!குறுக்கே வந்து நிற்கும் புதிய அம்சம்! இனிமேல் ஒரு போட்டோவை அவ்ளோ ஈஸியா Forward பண்ண முடியாது!

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தைக் கொடுக்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்.

வீட்டுக்கு LPG சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் உறுதி! வேற லெவல்.. உடனே இதை ஓபன் பண்ணுங்கவீட்டுக்கு LPG சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் உறுதி! வேற லெவல்.. உடனே இதை ஓபன் பண்ணுங்க

 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி

256ஜிபி ஸ்டோரேஜ் வசதி

குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ரூ.12,000 முதல் ரூ.49,999 வரை.. டிச.1 மற்றும் டிச.2-இல் அடுத்தடுத்து அறிமுகமாகும் ஐந்து புதிய 5G போன்கள்!ரூ.12,000 முதல் ரூ.49,999 வரை.. டிச.1 மற்றும் டிச.2-இல் அடுத்தடுத்து அறிமுகமாகும் ஐந்து புதிய 5G போன்கள்!

 6.7-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே

6.7-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே

இந்த புதிய ஒன்பிளஸ் போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதியுடன்இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

என்னிடம் வராதீர்கள், வகுந்து விடுவேன்.. நக்கலாக பதில் சொன்ன Elon Musk-ஐ என்னிடம் வராதீர்கள், வகுந்து விடுவேன்.. நக்கலாக பதில் சொன்ன Elon Musk-ஐ "வறுத்துவிட்ட" அமெரிக்க அதிகாரி!

108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் 5ஜி வசதிக்குத் தகுந்தபடி சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.

சொன்னா நம்புவீங்களா? பார்க்க பிரீமியம் லுக்ல இருக்குற இந்த Smartphone-ன் விலை வெறும் ரூ.7800 தான்!சொன்னா நம்புவீங்களா? பார்க்க பிரீமியம் லுக்ல இருக்குற இந்த Smartphone-ன் விலை வெறும் ரூ.7800 தான்!

குறைந்த விலையில்..

குறைந்த விலையில்..

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் குறைந்த விலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo courtesy:@ONLEAKS x @91Mobiles

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 3 5G phone with 108MP rear camera will be launched soon: Specs, Features and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X