பட்ஜெட் விலை Nord மாடலுக்கு அடிச்ச அதிர்ஷடம்.. OnePlus வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது, அதன் நோர்ட் சீரீஸின் (Nord Series) கீழ் இந்தியாவில் அறிமுகமான ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனிற்கு லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டை (Latest OS Update) வெளியிட்டுள்ளது. அதென்ன மாடல்? இந்த அப்டேட் வழியாக அந்த போனில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 (OnePls Nord CE 2) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்த போனிற்கு ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 எஃப்.48 அப்டேட் (OxygenOS 13 F.48 Update) கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த அப்டேட் மே மாதத்திற்கான செக்யூரிட்டி பேச்சையும் (Security Patch) கொண்டு வருகிறது.

இந்த சமீபத்திய ஆக்ஸிஜன்ஓஎஸ் அப்டேட் ஆனது ஃபார்ம்வேர் வெர்ஷன் ஐவி2201_11.எஃப்.48 (Firmware version IV2201_11.F.48) உடன் வருகிறது மற்றும் இது உங்களுடைய நோர்ட் சிஇ2 ஸ்மார்ட்போனுக்கு சிஸ்டம் ஸ்டெபிலிட்டி (System stability) உடன் சேர்த்து சில மேம்பாடுகளை (Improvements) கொண்டு வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அப்டேட் க்விக் செட்டிங்ஸின் (Quick Settings) பேக்கிரவுண்ட் டிஸ்பிளே எஃபெக்ட்டை (Background Display effect) மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் ஸ்மார்ட்போனின் ப்ரைட்னஸ் கண்ட்ரோலையும் (Brightness Control) சரிசெய்கிறது. ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின் முழு சேஞ்ச்லாக் (Changelog) இதோ:
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அப்டேட் சிஸ்டம் செக்யூரிட்டியை மேம்படுத்த மே 2023 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்சை கொண்டுவருகிறது. மேலும் சிஸ்டம் ஸ்டெபிலிட்டியை (System stability) மேம்படுத்துகிறது. உடன் க்விக் செட்டிங்ஸின் பேக்கிரவுண்ட் டிஸ்பிளே எஃபெக்ட்டை மேம்படுத்துகிறது. கடைசியாக,
க்விக் செட்டிங்ஸில் ஸ்க்ரீனின் ப்ரைட்னஸை கண்ட்ரோலை பாதிக்கும் சிக்கல் சரிசெய்யப்பட்டுள்ளது.
"இந்தியாவில் உள்ளவர்கள், கூகுள் டயலரை (Google Dialer) திறந்து *#800# என்று டைப் செய்வதன் மூலம் பக்ஸ்களை (Bugs) சமர்ப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட எண்ணை டயல் செய்யும் போது பக்ஸ்களை சமர்ப்பிக்க அனுமதிக்கும் மெனுவை காண்பீர்கள். இந்த முறை தற்போது இந்தியாவில் மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும் " என்றும் ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
மேலும் ஒன்பிளஸ் நிறுவனமானது இந்த அப்டேட்டை படிப்படியாகவே வெளியிடுகிறது. அதாவது தற்போது வரையிலாக இது சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கலாம். இருப்பினும் வரும் நாட்களில், நாட்டில் உள்ள அனைத்து ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
ஒன்பிளஸ் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை (Foldable Smartphone) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஒன்பிளஸின் முதல் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆனது இந்த 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரரான மேக்ஸ் ஜம்போர் (Max Jambor) வழியாக கிடைத்த தகவலின்படி ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தலாம். இருப்பினும், இந்த குறிப்பிடத்தக்க தகவலை தவிர, வரவிருக்கும் ஒன்பிளஸ் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் டிப்ஸ்டரால் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








