64எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. குறிப்பாககருப்பு, நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் வரும் ஏப்ரல் 30- தேதி மதியம் 12 மணிக்கு அமேசான், ஒன்பிளஸ் வலைதளங்களில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி விற்பனைக்கு வரும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,412பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OxygenOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி
கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளன. பின்பு இதன் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 33W SuperVOOC வயர்டு சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, 3.5எம்எம் ஆடியோ ஜாக், புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








