ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 22-ம் தேதி அமேசான் மற்றும் சில வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.23,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி மாடலை ரூ.24,999-விலையில் வாங்க முடியும்.குறிப்பாக பஹாமா ப்ளூ மற்றும் கிரே மிரர் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸமார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் + பிளஸ் ஆதரவு, கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட
பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதியைக்
கொண்டுள்ளது. பின்பு ARM Mali-G68 GPU ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.
பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+2எம்பி மேக்ரோ
கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே
16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது . பின்பு 65 வாட் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு பல சென்சார் வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் 5.2, என்எஃப்சி, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications