உடனடி தள்ளுபடி: ஒன்பிளஸ் நோர்ட் அட்டகாச விலையில் வாங்கலாம்- இதோ விவரங்கள்!

|

ஒன்பிளஸ் நோர்டை ரூ .1000 தள்ளுபடியில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள் மற்றும் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்

ஐசிஐசிஐ கார்டு மூலம், ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனை அமேசான் இந்தியாவில் வாங்கும்போது ரூ.1,000 உடனடி தள்ளுபடி விலையில் பெறலாம். அமேசான் இந்தியா இப்போது ஒன்பிளஸ் நோர்ட் அடிப்படை மாடலை ரூ .27,999 க்கு விற்கப்பட்டது. தற்போது இந்த சலுகை விலையில் ரூ .26,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் இந்த சலுகை விற்பனை செப்டம்பர் 21 நடைபெறும். ஒன்பிளஸின் மலிவான பிரீமியம் ஸ்மார்ட்போன் பட்டியலில் ஒன்பிளஸ் நோர்ட் உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ரூ.1,000 தள்ளுபடி

ஒன்பிளஸ் நோர்ட் ரூ.1,000 தள்ளுபடி

ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு அல்லது ஐசிஐசிஐ டெபிட் கார்டு மூலம் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் மட்டுமே ரூ.1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.24,999 எனவும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.27,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.29,999 எனவும் இருக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட்: அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட்: அம்சங்கள்

ஒன்ப்ளஸ் நோர்ட் அட்ரினோ 620 ஜி.பீ.யுடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி சிப்செட்டால் இயக்கப்படுகிறது. ஒன்ப்ளஸ் நோர்டின் மற்றொரு சிறப்பம்சமாக 6.44 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. 20: 9 என்ற விகிதத்தைக் கொண்ட இந்த காட்சி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

வெறும் ரூ.1 செலுத்தினால் போதும்: அட்டகாச சலுகையோடு பிளிப்கார்ட் பிக் சேவிங் தினம் அறிவிப்பு!

ஒன்பிளஸ் நோர்ட்: கேமரா

ஒன்பிளஸ் நோர்ட்: கேமரா

48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகாபிக்சல் ஆழம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. முன்புறத்தில் 32 - மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 - மெகாபிக்சல் அகல - கோண இரண்டாம் நிலை கேமரா கொண்டுள்ளது.

இரண்டு நானோ சிம்

இரண்டு நானோ சிம்

இரண்டு நானோ சிம்களுடன் வரும் ஒன்பிளஸ் நோர்ட், ஆண்ட்ராய்டு 10 ஆக்ஸிஜன் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் ப்ளூ மார்பிள் மற்றும் கிரே ஓனிக்ஸ் என்ற இரண்டு வண்ண வகைகளில் வருகிறது. ஒன்ப்ளஸ் நோர்டில் 4,115 எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oneplus Nord Available Rs. 1,000 instant discount Through Amazon.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X