ஒன்பிளஸ் நோர்ட் அறிமுகமே அட்டகாசம்! நம்பமுடியாத 'பரிசு' வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

|

ஒன்பிளஸ் நோர்ட் ஜூலை 21 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் உலகின் முதல் ஏஆர் ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வை நடத்தவுள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் வெளியீட்டு அழைப்பிதழ்கள் இலவசமாக இருக்காது என்று நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது. பிறகு இந்த ஏஆர் அனுபவத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் வெளியீட்டு

ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் வெளியீட்டு

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் வெளியீட்டு அழைப்பிதழ்கள் இலவசமாக இருக்காது என்று அறிவித்துள்ளது. மேலும் ஆர்வமுள்ள பயனர்கள் ரூ .99 செலுத்தி ஏஆர் வெளியீட்டிற்கான அழைப்பிதழை அமேசான் தளத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். இந்த கட்டண அழைப்பிதழ் பயனர்கள் ஏஆரைப் பயன்படுத்தி சமீபத்திய ஒன்பிளஸ் சாதனத்தை அனுபவிக்க அனுமதிக்கும்.

உறுதிப்படுத்தப்பட்ட பரிசு

உறுதிப்படுத்தப்பட்ட பரிசு

ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் வெளியீட்டு அழைப்பிதழ்களை வாங்குபவர்களுக்கு, அமேசானில் வெளியீட்டு நாள் லாட்டரியில் பங்கேற்கவும், உறுதிப்படுத்தப்பட்ட பரிசை வெல்லவும் வாய்ப்புள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. என்ன பரிசு வழங்கப்படும் என்பதை நிறுவனம் வெளியிடவில்லை. ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் வெளியீட்டு அழைப்பிதழ்கள் விற்பனை ஜூலை 11ம் தேதி இன்று முதல் நடைபெறுகிறது.

SBI ATM- முக்கிய அறிவிப்பு: 8 டூ 8., இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க இது வேணும்!SBI ATM- முக்கிய அறிவிப்பு: 8 டூ 8., இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க இது வேணும்!

Nord AR ஆப்

Nord AR ஆப்

ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் வெளியீட்டு அழைப்பிதழ்களை வாங்கவிரும்பும் பயனர்கள் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக மதியம் 12:00 மணி முதல் இந்த அழைப்பிதழை வாங்க முடியும். AR-ஐப் பயன்படுத்தி வரவிருக்கும் ஒன்பிளஸ் நோர்டை அனுபவிக்க, நீங்கள் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து Nord AR பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும்.

QR குறியீட்டு ஸ்கேன்

QR குறியீட்டு ஸ்கேன்

பயன்பாட்டை நிறுவிய பின், AR அனுபவத்திற்குத் தேவையான அனுமதிகளை நீங்கள் ஏற்க வேண்டும். பயனர்கள் பயன்பாட்டைத் தொடங்க வேண்டும் மற்றும் அவற்றின் அவதாரத்தை அமைக்க வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதைச் செய்தவுடன், வலை AR அனுபவத்தைத் தொடங்க அழைப்பிதழில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை கேமரா பயன்பாடு அல்லது கூகிள் லென்ஸ் அல்லது QR ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

ரூ .5000 மதிப்புள்ள நன்மை

ரூ .5000 மதிப்புள்ள நன்மை

இதன் மூலம் நீங்கள் ஏஆர் வெளியீட்டைக் காணமுடியும். அமேசான் இந்தியா இணையதளத்தில் ஒன்பிளஸ் நோர்டின் பட்டியல் ஆரம்பக்கால முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ .5000 மதிப்புள்ள நன்மைகள் கிடைக்கும். OnePlus நோர்ட் ஸ்மார்ட்போனை, நீங்கள் வரும் 15 ஜூலை 2020 இருந்து அமேசானின் வலைத்தளமான Amazon.in மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் ரூ .499 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள்! பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள்! பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!

புல்லட் வயர்லெஸ் வி1 இலவசம்

புல்லட் வயர்லெஸ் வி1 இலவசம்

முன்கூட்டியே ஆர்டர் செய்யும் பயனர்களுக்கு, ஒன்பிளஸிடமிருந்து வரையறுக்கப்பட்ட எடிஷன் பொருட்கள் அடங்கிய ஆச்சரியமான பரிசு பெட்டியைப் பெறுவார்கள் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், இதைப் பயனர்கள் வாங்கினால், அவர்களுக்கு இரண்டாவது பரிசு பெட்டியும் கிடைக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதில் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் வி1 மற்றும் மொபைல் கேஸ் வழங்கப்படும். இதைப் பெற ஆகஸ்ட் 31 க்குள் நீங்கள் சாதத்தை வாங்கி முடிக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord AR Launch Invitations Not Free: Check India Price : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X