Home
Mobile

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் நிறுத்தப்பட்டது: காரணம் என்ன?

ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கிவிட்டது. பின்பு இந்நிறுவனம் ஒன்பிளஸ் 7 சீரிஸிற்கான புதிய அப்டேட் வெளியிடுவதில் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

இந்நிலையில் ஒன்பிளஸ்நோர்ட் ஸ்மார்ட்போன் மாடலுக்கான ஆண்ட்ராய்டு 11 அப்டேட் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிறுவனம் கடந்த வாரம் தனது ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கான நிலையான ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ வெளியிட்டது. ஆனால் அதை இப்போது இடைநிறுத்தியுள்ளது.

பல்வேறு பிழைகள் வந்ததாக

மூன்று open பீட்டா நிலைகளில் பல்வேறு பிழைகள் வந்ததாக கூறப்படுகிறது. பின்பு பயனர்களுக்கும் பிழைகள் குறித்து புகாரளித்த பிறகு ஒன்பிளஸ் நோர்ட் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு நிறுத்தப்பட்டது. குறிப்பாக பயனர்கள் பேட்டரி சிக்கல்கள், ஜி.பி.எஸ் சிக்கல்கள் மற்றும் பலவற்றைப் புகார் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிக்கலைத் தீர்க்க நிறுவனம் இப்போது ஒன்பிளஸ் நோர்டுக்கான ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை இடைநிறுத்தியுள்ளதுடன், திருத்தங்களையும் செய்து வருகிறது. இப்போது ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைவிரிவாகப் பார்ப்போம்.

Fluid AMOLED டிஸ்பிளே

Fluid AMOLED டிஸ்பிளே

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். கண்டிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே பெரிய அளவில் இருப்பதால் ஆன்லைன் கேமிங், திரைப்படங்கள் போன்ற அனைத்து வசதிக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஒரளவு கேமிங் திறன் கொண்டு வெளிவந்துள்ளது, இதுவே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் இருந்தால் கேமிங் வசதிக்கு மிகவும் அருமையாக செயல்படும்.

48எம்பி சோனி சென்சார்

48எம்பி சோனி சென்சார்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே கேமராக்கள் தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்களை எடுக்கமுடியும்.

6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும்

ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு 5000எம்ஏஎச் பேட்டரி கொடுத்திருந்தால் பரவயில்லை, ஆனால் 4000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளதால் ஒரு நாள் மட்டுமே பேட்டரி தாங்கும் என்பது தான் உண்மை. இருந்தபோதிலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பது மிக மிக சிறப்பு.

மற்றும் யூ.எஸ்

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

128ஜிபி மெமரி கொண்ட

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ரூ.27,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ரூ.29,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்ததால் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது கூட இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Android 11 update stopped: What is the reason: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X