Home
Mobile

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. 9000mAh பேட்டரி.. 165Hz டிஸ்பிளே.. 12GB ரேம்.. 50MP OIS கேமரா.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளும்படியான பேட்டரியுடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது, வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், சிப்செட், பேட்டரி, டிஸ்பிளே, வேரியண்ட் மற்றும் கலர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. பட்ஜெட் மற்றும் விற்பனை விவரங்களும் தெரிய வந்துள்ளன.

நோர்ட் சீரிஸ்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் சீரிஸ் மாடல்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. இதில் ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், பெரிய பேட்டரியை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களையும் ஒன்பிளஸ் நோர்ட் 6 வெயிட்டிங் மோடில் வைத்தது. ஏனென்றால், சீன மார்கெட்டில் வெளியான ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) மாடலின் ரீபிராண்ட் வெர்ஷனாக இருக்கிறது.

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. 9000mAh பேட்டரி.. 165Hz டிஸ்பிளே.. மாடல்?

இதில் 9000mAh பேட்டரி கிடைத்து. டிஸ்பிளே, கேமரா, சிப்செட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிரளவிட்டது. ஆகவே, குளோபல் மற்றும் இந்திய வெளியீட்டுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இப்போது, இந்திய மார்கெட்டில் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) கிடைக்க இருக்கிறது.

இந்த தளத்தில் முக்கிய பீச்சர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் சிப்செட் மற்றும் நீண்ட நேரம் பேக்கப் கொடுக்கும் பெரிய பேட்டரி மற்றும் என்ஹான்ஸ் செய்யப்பட்ட கனெக்டிவிட்டி கொடுக்க பிரத்யேக சிப்செட் உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த பீச்சர்களை முதலில் பார்க்கலாம்.

பிரீமியம் கேமிங்

ஸ்மூத் கேமிங் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்க சிப்செட்டில் கவனம் செலுத்தப்பட்ட உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன 8எஸ் ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட்டுடன் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கிறது. மேலும், இன்ஸ்டன்ட் டச் ரெஸ்பான்ஸ் கொடுக்க டச் ரெஃப்ளெக்ஸ் சிப் (Touch Reflex Chip) கிடைக்கிறது.

இந்த சிப் கிடைப்பதால், 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (Instant Touch Sampling Rate) கிடைக்கும். வை-பை கனெக்டிவிட்டியை பூஸ்ட் செய்ய ஜி2 வை-பை சிப் (G2 Wi-Fi Chip) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, டிரிபிள் சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் இருக்கிறது.

மேலும், 165 எப்பிஎஸ் கேமிங் அவுட்புட் கொடுத்து உள்ளது. இந்த கேமிங் பீச்சர்களுக்கு ஏற்ப பேட்டரி சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. பிஜிஎம்ஐ, கால் ஆப் டியூட்டி மொபைல், ப்ரீ ஃபயர் மேக்ஸ் போன்ற கேம்களில் அதிகப்பட்ச அவுட்புட் கொடுக்கும்படி 165 எப்பிஎஸ் பயன்படுத்தப்படும். 6 ஆக்சிஸ் கேமிங் கைரோஸ்கோப் (Gming Gyroscope) உள்ளது.

இதுபோக பில்ட்-இன் ஸ்பாஷியல் ஆடியோ பூஸ்டர் (Built-in Spatial Audio Booster) கொடுக்கப்பட்டு உள்ளது. 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 1800 நிட்ஸ் ஹை பிரைட்னஸ் மோட் மறஅறும் 3600 நிட்ஸ் எச்டிஆர் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840 Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

பெரிய பேட்டரி

2.5 நாட்களுக்கு பவர் பேக்கப் கொடுக்கும்படி 9000mAh பேட்டரி கிடைக்கிரது. 26.9 மணி நேரங்களுக்கு யூடியூப் பிளேபேக் கொடுக்கிறது. 6.3 மணி நேரங்களுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங் பேக்கப் கொடுக்கும். மேலும், 16.6 மணி நேரங்களுக்கு கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் (Google Maps Navigation) கிடைக்கிறது. ஆகவே, பேக்கப்பில் முந்தைய மாடல்களை தூக்கி சாப்பிடுகிறது.

80W சூப்பர்வூக் (SUPERVOOC) சார்ஜிங் கிடைக்கிறது. கேமிங் மாடலாக இருப்பதால், ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கிடைக்கிறது. மேலும், 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 70 நிமிடங்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனை ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 12 மணி நேரங்களுக்கு ஸ்பாட்டிஃபை பயன்படுத்தலாம்.

பட்ஜெட் எப்படி?

இந்திய மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க உள்ளது. ரூ.35,000 முதல் ரூ.40,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாக இருக்கிறது. குயிக் சில்வர் (Quick Silver), ஃப்ரெஷ் மின்ட் (Fresh Mint) மற்றும் பிட்ச் பிளாக் (Pitch Black) கலர்களில் கிடைக்க உள்ளது. மற்ற பீச்சர்கள் ஒன்பிளஸ் டர்போ 6 மாடலை போலவே இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 With Snapdragon 8s Gen 4 Chipset 9000mAh Battery To Launch in India on April 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X