நாளைக்கு இருக்கு OnePlus கச்சேரி.. 9000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ஒன்பிளஸ் நிறுவனம் நாளை (ஏப்ரல் 7) ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக நாளை மாலை 7 மணி அளவில் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும். அதேபோல் அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் 6 போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 Specifications): தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 8s Gen 4) உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 1.5கே ரெசல்யூஷன் கொண்ட AMOLED டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate),3600 நிட்ஸ் எச்டிஆர் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் Sony கேமரா உள்ளது. இதுதவிர அல்ட்ரா வைடு கேமராவும் இந்த போனின் பின்புறம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளது.

IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
9000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போன் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photos credits: mymobileindia, oneplus


Click it and Unblock the Notifications








