OnePlus போட்டான் பாரு.. 9000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு இன்று நடக்க உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் சிப்செட், டச் ரெஃப்ளெக்ஸ் சிப் மற்றும் ஜி2 வை-பை சிப் கொண்ட மாடலாக களமிறங்க இருக்கிறது. வெளியீட்டுக்கு முன்னதாக விலை மற்றும் பீச்சர்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இன்று (ஏப்ரல் 7) நண்பகல் 12 மணிக்கு இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வெளியீட்டுக்கு முன்னதாகவே ஏப்ரல் 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. டிரிபிள் சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 இருக்கிறது. ஏற்கனவே முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன.

அதேபோல பட்ஜெட் விவரங்களும் தெரியவந்துள்ளன. முதலில் பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில், இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 மிரட்டலாக இருக்கிறது. ஏனென்றால், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் மட்டுமல்லாமல், கனெக்டிவிட்டி மற்றும் டச் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க 2 சிப்கள் கிடைக்கின்றன.
ஆகவே, கேமிங் பிரியர்களுக்காக டச் ரெஃப்ளெக்ஸ் சிப் கிடைக்கிறது. மேலும், லேக்-ப்ரீ கனெக்டிவிட்டி கொடுக்க ஜி2 வை-பை சிப் கொடுக்கப்படுகிறது. இதுபோக அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்க இருக்கிறது. இவ்வளவு பர்ஃபாமென்ஸ் கொடுக்க இருப்பதால், அதற்கு ஏற்ப பேட்டரி கேபாசிட்டி அதிகமாக இருக்கிறது.
பெரிய 9000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 2.5+ நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி இருக்கிறது. 26.9 மணி நேரங்களுக்கு யூடியூப் பிளேபேக் கொடுக்கும். 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. குயிக் சில்வர் (Quick Silver), ஃப்ரெஷ் மின்ட் (Fresh Mint) மற்றும் பிட்ச் பிளாக் (Pitch Black) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

ஏற்கனவே, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ரூ.35,000 முதல் ரூ.40,000 பட்ஜெட்டில் வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, மிட்-ரேஞ்ச் பிரியர்களுக்கு பக்கா மாடலாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் கிடைக்க இருக்கிறது.
இந்த தளத்தில் முன்னதாக பார்த்த சிப்செட், பேட்டரி, டிஸ்பிளே மற்றும் கலர் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. அதேபோல டிசைனும் உறுதியாகிவிட்டது. சீனாவில் களமிறங்கிய ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) ஸ்மார்ட்போனின் டிசைனை இதில் பார்க்க முடிகிறது. ஆனால், கேமரா உள்ளிட்ட சில பீச்சர்களில் மாற்றம் இருக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 Specifications): சோனி (Sony) சென்சார் மற்றும் டூயல் ஆக்சிஸ் ஓஐஎஸ் (OIS) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மல்டி போகஸ் சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைத்தது.
பிளஸ் மைண்ட் பீச்சர்கள் கிடைக்கின்றன. இதில் ஏஐ டிரான்ஸ்லேட், ஏஐ ரைட்டர் மற்றும் ஏஐ பாக்கெட் ஸ்கேனர் கிடைக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் உள்ளது. லைப்-டைம் டிஸ்பிளே வாரண்டி கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் எல்லாமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவையாகும். வெளியீட்டில் இதே இருக்கும்.


Click it and Unblock the Notifications








