Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.3,000 ஆஃபரில் 9000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. SONY கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ போக இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வெளியான மிகப்பெரிய பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் மாடலாக இந்த நோர்ட் 6 ஸ்மார்ட்போன் இருக்கிறது. சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, ஐபி69 ரேட்டிங் போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது.

பெரிய பேட்டரி கொண்ட மாடல்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இருக்கிறது. இதனாலே ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் சீரிஸ் மாடல்களில் பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் 9000mAh பேட்டரி மட்டுல்லாமல், 27W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங்குடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 வெளியாகியது. அமேசான் தளத்தில் 12 மணிக்கு விற்பனை தொடங்குகிறது.

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.3,000 ஆஃபரில் 9000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ஒன்பிளஸ் நோர்ட் 6 விலை (OnePlus Nord 6 Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,999 ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.41,999ஆக இருக்கிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ரூ.35,999 ஆரம்ப விலைக்கு இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையை கொடுத்து உள்ளது. குயிக் சில்வர் (Quick Silver), ஃப்ரஷ் மின்ட் (Fresh Mint) மற்றும் பிட்ச் பிளாக் (Pitch Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த விலைக்கு ஏற்ப பீச்சர்கள் உள்ளன.

ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core 4nm Snapdragon 8s Gen 4) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கிடைத்து உள்ளது.

6.78 இன்ச் ( 2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கிரிஸ்டல் குவார்ட் கிளாஸ் (Crystal Guard Glass) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது.

கேமரா பிரியர்களுக்கு ஏற்ப சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி08எப் (OmniVision OV08F) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 4K வீடியோ ரெக்கார்டிங்குடன் 32 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய 9000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.5 எம்எம் தடிமன் மற்றும் 217 கிராம் எடை கொடுத்துள்ளது.

பிரீமியம் டியூரபிலிட்டி கொடுக்க IP66, IP68, IP69 & IP69K ரேட்டிங் கிடைக்கிறது. கூடுதலாக MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 With 9000mAh Battery From Rs 35999 Sale Starts 12PM Today Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X