Home
Mobile

வேற எந்த போனும் வாங்கிடாதீங்க.. 9000mAh பேட்டரி, 80W சார்ஜிங் உடன் புதிய OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் 2026 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இவற்றில் ஒன்று - ஒன்பிளஸ் பிராண்டின் மிகவும் பிரபலமான பட்ஜெட் விலை சீரிஸ் ஆன ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸின் (OnePlus Nord Series) லேட்டஸ்ட் மாடல் ஆகும்.

அது ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் சான்றழ் தளம் ஒன்றின் வழியாக லீக் ஆகியுள்ளது. அதன் வழியாக ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

9000mAh பேட்டரி, 80W சார்ஜிங் உடன் புதிய OnePlus போன்!

இது சீனாவில் ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) ஆக அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் மாடல் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது சீனாவில் அறிமுகமாகும் மாடலில் உள்ள அதே அம்சங்களுடன் உலகளாவிய சந்தைகளில் (இந்தியா உட்பட) ஒன்பிளஸ் நோர்ட் 6 என்கிற மாடல் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 / ஒன்பிளஸ் டர்போ 6 மாடலில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.78-இன்ச் OLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம்
- 512GB UFS 4.1 ஸ்டோரேஜ்

- 50MP ப்ரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா
- 16MP செல்பீ கேமரா
- 80W வயர்டு சார்ஜிங்
- 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- 9000mAh பேட்டரி
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்

ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ள முக்கிய மாற்றம்: நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது இன்னும் அறிமுகம் செய்யப்படாத ஒப்போ பைண்ட் என்6 (Oppo Find N6) ஸ்மார்ட்போனின் ப்ரைமரி இமேஜிங் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்கிறது

இதன் விளைவாக ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது 200-மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் வரக்கூடும். ஒப்போ பைண்ட் என்6 ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் கேமரா, இரண்டாம் நிலை 50-மெகாபிக்சல் சென்சார் மற்றும் மூன்றாவது 200-மெகாபிக்சல் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லீக் உண்மையாகும் பட்சத்தில், முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 15 மாடல் உடன் ஒப்பிடும் போது, ஒன்பிளஸ் 16 மாடலில் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் மூன்று 50-மெகாபிக்சல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 6.31-இன்ச் BOE X3 OLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC)

- 50MP சோனி IMX906 ப்ரைமரி கேமரா (சில அறிக்கைகள் 200MP சாம்சங் HP5 சென்சாரை பரிந்துரைக்கின்றன)
- 50MP சாம்சங் JN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 7,500mAh பேட்டரி
- 100W அல்லது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 With 80W fast charging 9000mAh Battery Tipped to Launch soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X