Home
Mobile

மொபைல் மார்க்கெட்டில் பரபரப்பு.. திடீர்னு வந்த 7800mAh பேட்டரி OnePlus போன்.. அதுவும் தட்டி தூக்குற விலையில்!

மிகப்பெரிய 9000mAh பேட்டரி மற்றும் அல்ட்ரா ஸ்லிம் கேமரா பம்ப் உடன் ஒன்பிளஸ் டர்போ 6 மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களும் வருகிற ஜனவரி 8 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்தியாவிற்கான ஒரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது.

அது ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போன் ஆகும். ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த 2026 மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஆனது யுஏஇ-யின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையத்தின் (TDRA) இணையதளத்தில் காணப்பட்ட்டுது. முன்னதாக இதே மாடல் மலேசியாவின் SIRIM தரவுத்தளத்திலும் பட்டியலிடப்பட்டது.

திடீர்னு வந்த 7800mAh பேட்டரி OnePlus போன்..தட்டி தூக்குற விலையில்!

ஆக ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுகம் (இந்திய அறிமுகம் உட்பட) மிகவும் நெருக்கமாக உள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது சீனாவில் அறிமுகமான மாடல் அதே அம்சங்களுடன் வேறு பிராண்டிங் பெயரின் கீழ் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப் மற்றும் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமராக்களை கொண்டிருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.83-இன்ச் டிஸ்பிளே, 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ், 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.

மேலும் இது சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 6மாடலில் உள்ளதை போலவே, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66, IP68, IP69 மற்றும் IP69 K- மதிப்பிடப்பட்ட கட்டமைப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7800mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள? சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.32,000 க்கு அறிமுகமானது. ஆக இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 க்குள் தான் இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ரூ.34,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.'

200எம்பி கேமராவுடன் வரும் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போன்: நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது இன்னும் அறிமுகம் செய்யப்படாத ஒப்போ பைண்ட் என்6 (Oppo Find N6) ஸ்மார்ட்போனின் ப்ரைமரி இமேஜிங் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்கிறது

இதன் விளைவாக ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது 200-மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் வரக்கூடும். ஒப்போ பைண்ட் என்6 ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் கேமரா, இரண்டாம் நிலை 50-மெகாபிக்சல் சென்சார் மற்றும் மூன்றாவது 200-மெகாபிக்சல் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லீக் உண்மையாகும் பட்சத்தில், முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 15 மாடல் உடன் ஒப்பிடும் போது, ஒன்பிளஸ் 16 மாடலில் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் மூன்று 50-மெகாபிக்சல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 With 7800mAh Battery 120W Charging Expected to Launch Soon in India Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X