சாய்ச்சு புட்டான் மச்சான்.. மிட்-ரேன்ஜ் விலையில் 7800mAh பேட்டரியுடன் புதிய OnePlus போன்.. எந்த மாடல்?
ஏற்கனவே ஒன்பிளஸ் 15 (OnePlus 15), ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R), ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆகிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம், விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் மற்றும் லீக்ஸ்கள் (Leaks) ஆன்லைன் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகின்றன.
தற்போது இந்த பட்டியலில் - ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஞ் ஸ்மார்ட்போன் ஒன்றும் சேர்ந்துள்ளது. அது ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனாகும். இது கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும்.

டிப்ஸ்டர் பராஸ் குல்கர்னி (Tipster Paras Guglani / Passionategeekz.com) வழியாக கிடைத்த விவரகளின்படி ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது ஐஎம்இஐ (IMEI) தரவுத்தளத்தில் CPH2807 என்கிற மாடல் நம்பரின் கீழ் காணப்பட்டுள்ளது.முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 5 ஆனது CPH2707 என்கிற மாடல் நம்பரை கொண்டிருந்தது, ஆக CPH2807 என்பது ஒன்பிளஸ் நோர்ட் 6 ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஆக சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஆக அறிமுகமாகும் மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஆக, அதே அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஐஎம்இஐ லிஸ்டிங் ஆனது வரவிருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் வேறு எந்த முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தவில்லை.
மேலும் ஒன்பிளஸ் ஏஸ் 6 எப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்படும் அல்லது ஒன்பிளஸ் நோர்ட் 6 எப்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற விவரங்களும் இல்லை. ஆனால் நிச்சயம் டிஸ்பிளே, பேட்டரி லைஃப் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் ஆகிய துறைகளில் நல்ல மேம்பாடுகள் இருக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite SoC) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் 120W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 7800mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ரீடர் மற்றும் ஸ்க்யுரிக்கல்-ஷேப்ட்டு ரியர் கேமரா யூனிட் ஆகியவைகளையும் எதிர்பார்க்கலாம்.
கடந்த ஜூலை மாதம் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் விலை: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.31,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. கூடவே 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் முறையே ரூ.34,999 மற்றும் ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டன
ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.83-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (சோனி LYT-700 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எப் /1.8 அபெர்க்ஷர்)
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 120-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- சாம்சங் ISOCELL JN5 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- இன்ப்ரா ரெட் (IR) டிரான்ஸ்மிட்டர்
- 6800mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ், நாவிக் மற்றும் யுஎஸ்பி டைப்- சி


Click it and Unblock the Notifications








