மிரள விட போகும் புது OnePlus 5ஜி போன்.. 9000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 12ஜிபி ரேம்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்து இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 specification): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 8s Gen 4 SoC) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் வெளிவரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.5கே பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே(1.5K flat OLED display) உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இந்த போனில் உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

9000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








