Home
Mobile

ஏப்ரல் 7 வரை எந்த போனும் வாங்காதீங்க.. இந்தியாவுக்கு வரும் புதிய OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 Specifications): 1.5கே ரெசல்யூஷன் கொண்ட AMOLED டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate),3600 நிட்ஸ் எச்டிஆர் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஏப்ரல் 7 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது OnePlus 5ஜி போன்..

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 8s Gen 4) உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதுவும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா உள்ளது. இதுதவிர அல்ட்ரா வைடு கேமராவும் இந்த போனின் பின்புறம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor)வசதியும் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளது.

அதேபோல் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

ஏப்ரல் 7 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது OnePlus 5ஜி போன்..

ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் 9000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. வரும் ஏப்ரல் 7-ம் தேதி இரவு 7 மணிக்கு புதிய ஒன்பிளஸ் நோர்ட் 6 போன் அறிமுகமாகும். பின்பு இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.35,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 price and specifications revealed ahead of launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X