மார்க்கெட்டே திணறப்போகுது.. 50எம்பி கேமரா.. 120W சார்ஜிங்.. வருகிறது புது ஒன்பிளஸ் போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் மலேசியாவில் உள்ள SIRIM Berhad சான்றிதழ் வலைத்தளத்தில் CPH2795 என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் தான் ஒன்பிளஸ் நோர்ட் 6 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 specifications): 6.83-இன்ச் 1.5கே அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1272 பிக்சல்ஸ், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்(in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 போன் வெளிவரும். மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
7800mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120று ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். 5ஜி, 4ஜி வோல்ட், ப்ளூடூத் 5.4, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








