நீ டாப் கியர் போட்டு தூக்கு.. OnePlus-ன் 5வது புது போன்.. 9000mAh பேட்டரி கொண்ட Naruto ஸ்பெஷல் எடிஷன்!
போதும் போதும் லிஸ்ட்டு பெருசா போய்கிட்டே இருக்கு என்கிற படியாக.. ஒன்பிளஸின் "5வது புதிய ஸ்மார்ட்போன்" குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 7500எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் 15டி-யின் (OnePlus 15T) சீன அறிமுகம் மார்ச் 24 நடக்குமென்கிற அறிவிப்பு வெளியான வேகத்தில், 9000mAh பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் நார்ட் 6-ன் (OnePlus Nord 6) இந்திய அறிமுகம் ஏப்ரல் 2026-ல் நடக்கலாம் என்கிற லீக்ஸ் வெளியாகி இருந்தன.
கண்டிப்பாக ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி மாடல் மட்டும் தனியாக அறிமுகமாகாது; கூடவே ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 5ஜி (OnePlus Nord CE 6 5G) மாடலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆக வரும் மாடலும் இந்திய சந்தையில் (சில மாதங்களில் அல்லது வாரங்களில்) ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்புகள் அதிகம்.

இப்படியாக ஏற்கனவே 3 புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்கள் "கிட்டத்தட்ட" உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், நேற்று சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 சீரிஸின் கீழ் புதிய அல்ட்ரா (ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா) மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகி இருந்தது; இதோடு மொத்தம் 4 புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்!
இதற்கிடையில் இன்று - இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி மாடலானது ஒரு ஸ்பெஷல் எடிஷனை பெறலாம் என்றும், அது ஒன்பிளஸ் நார்ட் 6 நருடோ லிமிடெட் எடிஷன் (OnePlus Nord 6 Naruto Limited Edition) ஆக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மாடல் பெயர் குறிப்பிடுவதை போலவே இது பிரபலமான மங்கா மற்றும் அனிமே சீரீஸ் ஆன நருடோவை அடிப்படையாக கொண்ட ஒரு ஸ்பெஷல் (அல்லது லிமிடெட்) எடிஷன் ஸ்மார்ட்போனாக இருக்கும்.
ஒன்பிளஸ் கிளப்பின் ஒரு பதிவின்படி, ஒன்பிளஸ் நார்ட் 6 நருடோ லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பெயர், அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் இணையதளத்தின் சேவை பக்கத்தில் காணப்பட்டுள்ளது. அங்கே ஒன்பிளஸ் நார்ட் 6 நருடோ லிமிடெட் எடிஷன் ஆனது ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் நார்ட் 6 உடன் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் சிறப்புப் பதிப்புகளை வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலத்தில், இந்நிறுவனம் ஒன்பிளஸ் 12R ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷன், ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் லிமிடெட் எடிஷன் மற்றும் ஒன்பிளஸ் நார்ட் 2 × பேக்-மேன் எடிஷன் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. இது நார்ட் வரிசையில் இரண்டாவது பதிப்பாகும். மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்டிருந்தாலும், உலகளவில் பிரபலமான ஒரு மங்கா மற்றும் அனிமே தொடரை அடிப்படையாகக் கொண்டது. ஒன்பிளஸ் நிறுவனம், வழக்கமாக நார்ட் தொடரின் இலக்குக் குழுவாக இருக்கும் இளம் பார்வையாளர்களைக் கவர முயற்சிக்கலாம்.
இந்த ஸ்பெஷல் எடிஷனின் டிசைன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒன்பிளஸ் நிறுவனம் "அழகியல்" விஷயத்தில் எப்போதுமே குறை வைத்தது இல்லை. கூறப்படும் ஒன்பிளஸ் நார்ட் 6 நருடோ லிமிடெட் எடிஷன் ஆனது ஒரு ஸ்பெஷல் பாக்ஸ் மற்றும் சில ஆக்சஸெரீஸ்களுடன் வெளிவர வாய்ப்புள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் நருடோ தீம்ஸ் மற்றும் பிரத்யேக யுஐ உடனும் வரலாம். இதுதவிர்த்து பெரும்பாலான அம்சங்கள் ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் நார்ட் 6 மாடலுடன் ஒற்றுபோகலாம். அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட், பிரம்மாண்டமான 9,000mAh பேட்டரி, 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே, 50MP + 2MP ரியர் கேமரா, 16MP செல்பீ கேமரா போன்ற அம்சங்கள் பொதுவானதாக இருக்கலாம்.
OPINION - ஒன்பிளஸ் நார்ட் 6 / நார்ட் 6 ஸ்பெஷல் எடிஷனுக்காக வெயிட் பண்ணி, இரண்டில் ஒன்றை வாங்கலாமா? நார்ட் 6 மாடலை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் வருகையானது, பிரீமியம் மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவில் நிச்சயம் சலசலப்பு ஏற்படும். இந்த பிரிவு - பெர்பார்மென்ஸ் மற்றும் பேட்டரி லைஃப்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஒரு பிரிவாகும். நார்ட் 6 அதற்கு ஏற்ற அம்சங்களை தான் கொண்டுள்ளது போல் தெரிகிறது (லீக்ஸ் வழியாக கிடைத்த தகவல்களின் படி).
ஸ்பெஷல் எடிஷனை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் ஸ்பெஷல் எடிஷன்களை வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலத்தில், இந்நிறுவனம் ஒன்பிளஸ் 12ஆர் ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷன், ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் லிமிடெட் எடிஷன் மற்றும் ஒன்பிளஸ் நார்ட் 2 × பேக்-மேன் எடிஷன் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. ஆக நருடோ ஸ்பெஷல் எடிஷன் ஆனது நார்ட் சீரிஸின் கீழ் வரும் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் ஆகும். இது - மற்ற எல்லா ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை போலவே - நருடோ சீரீஸின் தீவிரமான ரசிகர்களை தவிர்த்து வேறு யாரையும் ஈர்க்காது!


Click it and Unblock the Notifications








