முரட்டு OnePlus இதுதான்.. 9000mAh பேட்டரி.. OIS கேமரா.. IP69K ரேட்டிங்.. 12GB ரேம்.. 256GB மெமரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் முரட்டு மாடலாக ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, ஐபி ரேட்டிங் மற்றும் டிஸ்பிளே புரொடெக்சன் ஆகிய பீச்சர்கள் இப்போது உறுதியாகி இருக்கின்றன. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, சிப்செட், பேட்டரி, டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் படிப்படியாக அமேசான் தளத்தில் வெளியாகி வருகின்றன. இப்போது, டியூரலிபிட்டி பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன.

பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் டாப்-லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, அண்டர் வாட்டர் புரொடெக்சன் கிடைக்கும்.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சனுக்கு நிகராக கிரிஸ்டல் குவார்ட் கிளாஸ் (Crystal Guard Glass) டிஸ்பிளே புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனை இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.
ஆகவே, ஷாக் ரெசிஸ்டன்ஸ், டிராப் ரெசிஸ்டன்ஸ், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை கொடுத்து உள்ளது. ஆகவே, பிரீமியம் பர்ஃபாமென்ஸ், அதிக பேட்டரி கேபாசிட்டி மட்டுமல்லாமல், டியூரபிலிட்டியிலும் அடுத்த லெவலுக்கு இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் சென்றுள்ளதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 Specifications): சோனி (SONY) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு டூயல் ஆக்சிஸ் ஓஐஎஸ் (Dual-Axis OIS) டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், மல்டி போகஸ் (Multi Focus) கிடைக்கிறது. 2X ஜூமிங் மற்றும் 4K 60 எப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங் கொடுத்து உள்ளது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டரில் மல்டி போகஸ் சென்சார் கிடைக்கிறது. 4கே மோஷன் போட்டோ கிளிப்பர் (4K Motion Photo Clipper) சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ அன்பிளர் (AI Unblur) கிடைக்கிறது.
மேலும், ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot) கிடைத்து உள்ளது. ஒன்பிளஸ் மைண்ட் ஸ்பேஸ் (OnePlus Mind Space) கிடைக்கிறது. இந்த கன்ட்ரோல்களுக்கு பிளஸ் கீ (Plus Key) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஏஐ டிரான்ஸ்லேட், ஏஐ ரைட்டர் மற்றும் ஏஐ பாக்கெட் ஸ்கேனர் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
1.5K ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. 1800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ், 3840 PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 165 FPS கேமிங் அவுட்புட் கிடைத்து உள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் ரூ.40,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








