Home
Mobile

7800mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. புது OnePlus போன்.. வெயிட்டிங் மோடில் ஸ்மார்ட்போன் பிரியர்கள்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைக்கும்படி ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) மாடலின் வெளியீட்டு விவரங்கள் கசிந்துள்ளன. 7800mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா பீச்சர்களை எதிர்பார்க்க முடிகிறது. இந்த நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஏனென்றால், ரூ.31,999 பட்ஜெட்டில் 6800mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் மற்றும் 6.83 இன்ச் (2772 x 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்தது.

7800mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. புது OnePlus போன்.. வெயிட்டிங் மோட்!

மேலும், சோனி எல்ஒய்டி 700 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா போன்ற மொத்த பீச்சர்களிலும் பட்டையை கிளப்பியது. இதனால், ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நேரத்தில் அந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் டைம்லைன் கசிந்துள்ளது. 2026ஆம் ஆண்டு 2ஆவது காலாண்டில் வெளியாகும் என்பது தெரிகிறது.

டிப்ஸ்டர் Yogesh Brar அவரது எக்ஸ் தளத்தில் இந்த வெளியீட்டு விவரங்களை போஸ்ட் செய்துள்ளார். இது கிட்டத்த உறுதி போலத்தான். ஏனென்றால், முன்னதாக வெளியான நோர்ட் 5 ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதத்தில் வெளியாகியது. அதேபோல நோர்ட் 4 ஸ்மார்ட்போன் கடந்தாண்டு ஜூலை மாதத்திலேயே வெளியாகியது. இது 2ஆவது காலாண்டை குறிக்கிறது.

ஆகவே, ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனையும் அடுத்த ஜூலை மாதத்தில் எதிர்பார்க்கலாம். இந்த வெளியீட்டு விவரங்களுக்கு முன்னதாகவே, சீனாவில் வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஸ்மார்ட்போனின் ரீபிராண்ட் வெர்ஷனாகவே இந்த நோர்ட் 6 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்ற தகவலும் கசிந்துவிட்டது. ஆகவே, அந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலையை பார்ப்போம்.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அம்சங்கள் (OnePlus Ace 6 Specifications): இந்த ஏஸ் ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 7800mAh பேட்டரி மற்றும் 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொடுக்கிறது.

சீன மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.33,000 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவில் ரூ.34,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியான நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ரூ.31,999 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, அதைவிட கூடுதல் விலைக்கே வெளியாகும். மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைப்பது உறுதியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 Launch Tipped To Launch Q2 Next Year Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X