Home
Mobile

ஓரம்போ.. OnePlus-ன் புதிய 5ஜி போன்.. 9000mAh பேட்டரி, 80W SuperVOOC சார்ஜிங், IP69K ரேட்டிங்.. என்ன மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் ஆகி வருகிறது. அது கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போன் ஆகும்.

9000mAh பேட்டரி உடன் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் டர்போ 6 மாடல் தான் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஆக அறிமுகம் செய்யப்படும் என்று, அதாவது ரீபிராண்டட் வெர்ஷன் ஆக அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஓரம்போ.. OnePlus-ன் புதிய 5ஜி போன்.. 9000mAh பேட்டரி!

சீனாவில் ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது எப்படியும் இன்னும் சில வாரங்களுக்குள் (அதிகபட்சம் இந்த 2026 காலாண்டிற்குள்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இதன் அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ளதை உறுதிப்படுத்தும் படியாக, கீக்பென்ச் (Geekbench) வலைத்தளத்தில் சன் (sun) என்கிற குறியீட்டு பெயர் கொண்ட மதர்போர்டு உடன் காணப்பட்டு உள்ளது. இந்த குறியீட்டுபெயர் ஆனது ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போனில் காணப்படும் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4 SoC) உடன் தொடர்புடையது.

சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் 16
- 6.78-இன்ச் FHD+ (1272 x 2,772 பிக்சல்ஸ் பிளெக்ஸிபிள் AMOLED டிஸ்ப்ளே
- 450ppi பிக்சல் டென்சிட்டி
- 60Hz முதல் 165Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்

- 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 330Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- அட்ரெனோ 825 ஜிபியு உடனான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்
- 16GB LPDDR4X ரேம் மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்

- 1.8 அபெக்ஷர், ஆட்டோஃபோகஸ் கொண்ட 50-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ப்ரைமரி கேமரா
- 20x டிஜிட்டல் ஜூம் வரை கொண்ட 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- 80W SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 9,000mAh பேட்டரி

ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போனின் சீன விலை விவரங்கள்: ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபிஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.27,000 க்கும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷன்கள் முறையே சுமார் ரூ.30,000, ரூ.33,000 மற்றும் ரூ.37,000 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது லைட் சேஸர் சில்வர், லோன் பிளாக் மற்றும் வைல்ட் கிரீன் ஆகிய 3 கலர்களில் வெளியாகியுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 Launch Soon New leak suggests Snapdragon 8s Gen 4 Possibly OnePlus Turbo 6 Rebrand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X