மொத்த மார்க்கெட்டையும் திரும்பி பார்க்க வைக்கும் OnePlus 5ஜி போன்.. 9000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஒன்பிளஸ் போன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 8s Gen 4) உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor)வசதியும் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளது.
IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

9000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.35.000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








