Home
Mobile

கிடுகிடுவென உயர்ந்த லேட்டஸ்ட் OnePlus 5ஜி போனின் விலை.. 9000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனின் விலை சத்தமின்றி உயர்ந்துள்ளது. அதுவும் ஒன்பிளஸ் 15ஆர் போனுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 போனின் விலை உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் மெமரி மற்றும் சிப்செட் விலைகளைத் தொடர்ந்து இந்த ஒன்பிளஸ் போன்களின் விலை உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 6 வேரியண்ட் ரூ.38,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த வேரியண்ட் விலை உயர்த்தப்பட்டு ரூ.41,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.41,999 அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த வேரியண்ட் விலை உயர்த்தப்பட்டு ரூ.46,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கிடுகிடுவென உயர்ந்த லேட்டஸ்ட் OnePlus 5ஜி போனின் விலை.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 specifications): 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772 x 1272 பிக்சல்ஸ், 165Hz ரெஃப்ரெஷ் ரேட், 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

OxygenOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் ஒன்பிளஸ் நோர்ட் 6 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைககும். இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி Sony LYTIA-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 6 போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

கிடுகிடுவென உயர்ந்த லேட்டஸ்ட் OnePlus 5ஜி போனின் விலை.. எந்த மாடல்?

IP66/IP68/IP69/IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் 6.0, ஜிபிஎஸ், பெய்டோ , குளோனாஸ், கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

9000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 Gets a Price Hike in India: Check the New Prices
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X