Home
Mobile

OnePlus ஆட்டமே வேற.. 9000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. விலை எப்படி?

ஸ்மார்ட்போன் மார்கெட்டே எதிர்பார்த்து கொண்டிருக்கும் மாடலாக ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போன் இருக்கிறது. டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கேமரா உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இப்போது, விலை விவரங்களும் கசிந்து, மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் சீரிஸ் மாடல்களுக்கு இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த வரிசையில் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) ஸ்மார்ட்போனானது, கடந்த ஜூலை மாதம் வெளியாகி விற்பனையில் பட்டையை கிளப்பியது. இப்போது, 9000mAh பேட்டரியுடன் ஒன்பிளஸ் நோர்ட் 8 களமிறங்க இருப்பதால், எதிர்பார்ப்பு இரட்டிப்பாக இருக்கிறது.

OnePlus ஆட்டமே வேற.. 9000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. மாடல்?

ஏனென்றால், நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் 6800mAh பேட்டரி மட்டுமே கிடைத்தது. ஆனால், ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் 9000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இதனாலேயே ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களும் இந்த மாடலுக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது, விலை குறித்த விவரங்கள் கசிந்துள்ளன.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் அவரது எக்ஸ் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் விலை எப்படி இருக்கும் என்பதை பதிவிட்டுள்ளார். அதன்படி 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க உள்ளன.

512 ஜிபி வேரியண்ட்டை இதில் எதிபார்க்க முடியாது. ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனை விட ரூ.3,000 முதல் ரூ.5,000 வரையில் விலை அதிகமாக இருக்கும் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது.

ஆகவே, இதில் இருந்து ரூ.3,000 முதல் ரூ.5,000 வரையில் விலை அதிகமாக ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் கிடைக்கும். இருப்பினும், ரூ.35,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்பதால், மிட்-ரேஞ்ச் பிரியர்களுக்கும், அதிக பேட்டரி கேபாசிட்டி விரும்பும் பிரியர்களுக்கும் இது பக்கா மாடலாக இருப்பது தெரிகிறது. இப்போது, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள் (OnePlus Nord 6 Specifications): 6.78 இன்ச் பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப டிஸ்பிளே அவுட்புட்டை எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கிடைக்க உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 8s Gen 4) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் கொடுக்க உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட உள்ளது.

IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட உள்ளது. ஜூலை மாதத்தில் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் வெளியானதால், ஓரிரு மாதங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர வாய்ப்புள்ளது. ஏனென்றால், முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் ஏற்கவே கசிந்துவிட்டன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 8GB RAM 256GB Storage Price Details Surfaced Ahead Of Launch Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X