Home
Mobile

அசூர விற்பனை.. ரூ.2,250 ஆஃபரில் OnePlus போன்.. 6800mAh பேட்டரி.. 50MP கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் 6800mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி மெயின் கேமரா, அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், பிளஸ் கீ பீச்சரை கொடுக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் கொண்ட இந்த நோர்ட் 5 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த நோர்ட் மாடலில் பிளஸ் கீ (Plus Key) என்னும் கஸ்டமைசபிள் பட்டன் கிடைக்கிறது. இதில் சவுண்ட், வைப்ரேஷன், டிஎன்டி மற்றும் ஏஐ பீச்சர்களை அக்சஸ் செய்ய முடியும். இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு மற்றும் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

அசூர விற்பனை.. ரூ.2,250 ஆஃபரில் OnePlus போன்.. 6800mAh பேட்டரி.. 50MP!

ஆகவே, டிசைன் மற்றும் குவாலிட்டியில் பிரீமியம் போன்களுக்கு நிகரான அவுட்புட் கொடுத்துள்ளது. கேமராவில் சோனி சென்சார், சாம்சங் சென்சார் கிடைக்கிறது. முழு பீச்சர்களை பார்ப்பதற்கு முன்பாக விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த நோர்ட் 5 போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது. இந்த மார்கெட் விலையில் இருந்து இப்போது ரூ.2,250 பேங்க் தள்ளுபடி போக ஆர்டர் செய்து கொள்ளலாம். இதை பெறுவதற்கு ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.

அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்க வேண்டும். அப்படியில்லை என்றால், ரூ.2,000 தள்ளுபடி போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.29,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.30,100 வரையில் சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் 5 போனில் மார்பள் சாண்ட்ஸ் (Marble Sands), ட்ரை ஐஸ் (Dry Ice) மற்றும் பான்டம் கிரே (Phantom Grey) ஆகிய கலர்கள் வருகின்றன. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் பஞ்ச் ஹோல் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 5 அம்சங்கள் (OnePlus Nord 5 Specifications): 6.83 இன்ச் (2772 x 1240 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3,840Hz டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் பி3 கலர் காமட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (Oxygen OS 15) உள்ளது.

மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700 சென்சாரும், செல்பீ கேமராவில் சாம்சங் ஜேஎன்1 சென்சாரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 4K ரெக்கார்டிங், ஓஐஎஸ் டெக்னாலஜி போன்ற வழக்கமாக மிட்-ரேஞ்ச் கேமரா பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 5 மாடலானு, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், பெரிய 6800mAh பேட்டரி பேக் செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 With 8GB RAM Available At Discounted Price Check Amazon Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X