Home
Mobile

அடுத்தடுத்து அறிமுகம்.. 6650mAh பேட்டரி, OLED டிஸ்பிளே, 50எம்பி OIS கேமராவுடன் புது OnePlus போன்!

2025 ஆம் ஆண்டு தொடங்கியதுமே ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தீயாக வேலை செய்ய தொடங்கியது. இந்தியாவில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலை மட்டுமின்றி ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus) மாடலையும் சேர்த்து அறிமுகம் செய்தது. தற்போது இந்திய சந்தைக்கான ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது மே 2025 க்குள் அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது!

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 2024 இல் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? மற்றும் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்கிற விவரங்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்து அறிமுகம்.. 6650mAh பேட்டரி உடன் புது OnePlus போன்!

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (OnePlus Nord 5 Expected Specifications)?
- 1.5கே ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- பிளாட் OLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ சிப்செட்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்

- 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,650mAh பேட்டரி
- ஐஆர் பிளாஸ்டர்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு, எப்போது அறிமுகமாகும் (OnePlus Nord 5 India Launch Timeline and Price)? டிப்ஸ்டர் டெபயன் ராய் (@Gadgetsdata) வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது தோராயமாக ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படலாம்; இது 2025 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் வெளியிடப்படலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனில் UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும். கடைசியாக இது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 With 6650mAh Battery India Launch Timeline Specifications Price range All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X