Home
Mobile

OnePlus ஒரே போடு.. SONY கேமரா.. 12GB ரேம்.. 144FPS கேமிங்.. 50MP செல்பீ.. 7300mm விசி கூலிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் (OnePlus Nord Series) பிரியர்கள் ஒட்டுமொத்த பேரும் ஜூலை 8ஆம் தேதிக்கு வெயிட்டிங் மோடில் காத்திருக்கின்றனர். ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் (OnePlus Nord 5 Series) மாடல்கள் களமிறங்க இருக்கின்றன. இதில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மற்றும் கேமரா பீச்சர்களை ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) கொடுக்க இருக்கிறது. இந்த நோர்ட் மாடலின் பீச்சர்கள் எப்படி? எந்த பட்ஜெட்டில் வெளியாகும்? உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 5 மட்டுமல்லாமல், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) ஆகிய மாடல்கள் ஜூலை 8ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒன்பிளஸ் இந்தியா தளத்திலும் முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன.

இதில் பிரீமியம் கேமிங் மற்றும் கேமரா அவுட்புட் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ற பீச்சர்களுடன் ஒன்பிளஸ் நோர்ட் 5 போனானது வெளியாக இருக்கிறது. ஏனென்றால், சிப்செட், டிஸ்பிளே, கேமரா மற்றும் சென்சார்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. இது கேமிங் மற்றும் கேமரா பிரியர்களுக்கான மாடல் என்பதை உறுதி செய்துள்ளன.

ஒன்பிளஸ் நோர்ட் 5 அம்சங்கள் (OnePlus Nord 5 Specifications): இந்த நோர்ட் மாடலில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) எஸ்ஓசி கிடைக்கிறது. இதில் 12 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 144FPS கேமிங் அவுட்புட் கிடைக்கிறது. ஆகவே, பிஜிஎம்ஐ (BGMI) மற்றும் சிஓடிஎம் (CODM) போன்ற கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி எதிர்பார்க்கலாம்.

OnePlus ஒரே போடு! SONY கேமரா.. 12GB ரேம்.. 144FPS கேமிங்.. எந்த மாடல்?

கேமிங்கின் போது ஹீட் கன்ட்ரோலுக்காக பெரிய விசி கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது. அதாவது, 7300எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொடுக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில் கேமிங் பிரியர்களுக்கான மாடல் என்பது தெரிகிறது. இப்போது, கேமரா பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். பிரீமியம் டூயல் ரியர் கேமரா + செல்பீ ஷூட்டர் என்று கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. மெயின் கேமராவில் மிட்-ரேஞ்ச் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 700 (SONY LYT 700) சென்சார் கொடுக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரில் சாம்சங் சென்சார் வருகிறது.

OnePlus ஒரே போடு! SONY கேமரா.. 12GB ரேம்.. 144FPS கேமிங்.. எந்த மாடல்?

ஆகவே, சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் மற்றும் மல்டி போகஸ் (Multi Focus) சப்போர்ட் கிடைக்கிறது. மெயின் கேமராவில் 4K 60FPS ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. இது மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்கும் என்பது உறுதியாகும். ஆகவே, ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியாகலாம்.

அமேசான் பிரைம் டே சேல் ஆனது ஜூலை 12ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தேதிகளில் ஒன்பிளஸ் நோர்ட் 5 போனின் விற்பனை தொடங்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஓப்பன் சேலாக இருக்குமா அல்லது லிமிடெட் ப்ரீயட் சேலாக இருக்குமா என்பது ஜூலை 8ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 With 50MP Camera 12GB RAM To Launch India on July 8 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X