Home
Mobile

ஆபர் விலையில் OnePlus Nord 5 விற்பனை.. அறிமுகமான மறுநாளே பெரிய டிஸ்கவுண்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க!

இவ்வளவு வேகமாக விற்பனைக்கு வந்த.. அதாவது அறிமுகமான மறுநாளே விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இதுவாகத்தான் இருக்க முடியும். நேற்று (ஜூலை 8) மதியம் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (ஜூலை 9) மதியம் தொடங்குகிறது.

அசல் விலை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.34,999 மற்றும் ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆபர் விலையில் OnePlus Nord 5 விற்பனை!

விற்பனை விவரங்கள்: ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது ட்ரை ஐஸ், மார்பில் சேன்ட்ஸ் மற்றும் ஃபாண்டம் க்ரே என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் இன்று (ஜூலை 9 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் நிறுவனத்தின் சொந்த வலைத்தளம் மற்றும் ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக விற்பனைக்கு வரும்.

ஆபர் விவரங்கள்: தகுதியான பேங்க் கார்டுகளை பயன்படுத்தி ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2,000 உடனடி தள்ளுபடியை பெறலாம் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.31,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் 5 அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.83-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன் 12ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் கொண்டு இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது சோனி எல்ஒய்டி-700 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர் உடன் வருகிறது. இது ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள அதே பிளாக்ஷிப் கேமரா சென்சார் ஆகும்.

ஆபர் விலையில் OnePlus Nord 5 விற்பனை!

ப்ரைமரி கேமராவுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 120-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், இது சாம்சங் ஐசோசெல் ஜேஎன்5 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6800எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

ஜூலை 12 முதல் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 விற்பனை: ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்ட 7100mAh பேட்டரி உடனான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 12 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.26,999 மற்றும் ரூ.28,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது பிளாக் இன்பினிட்டி, மார்பில் மிஸ்ட் மற்றும் நெக்சஸ் ப்ளூ ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இதன்மீதும் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும்

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 Sale in India Starts From Today July 9 Check Out The Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X